neer paambudan oru naal

நீர் பாம்புடன் ஒரு நாள்

கான் ஒரு நீர் பாம்பை பிடித்தான்! இந்த ஆழகடல் வீரச்செயலில், கான் விசித்திரமான உயிரினங்களை சந்தித்து, புதிய நண்பர்களை கண்டுபிடித்து, ஒரு பெரிய உதவி கூட செய்தான்.

- Akilan Dayasankar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள், கான் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது தூங்கிவிட்டான். அவன் கம்பியில் இரையாக அரிசியை வைத்தான். மீன் அரிசியை சாப்பிடும் என்று அவன் காத்திருந்தான்.

திடீரென்று, கானுடைய மீன்பிடி கம்பி அசைய ஆரம்பித்தது! அவன் உடனே எழுந்தான்.

அது என்னவாக இருக்கும்?

ஒரு உயிரினம் கம்பியிலிருந்து தன்னை விடுவிக்க துடித்து கொண்டிருந்தது!

அந்த உயிரினம், கம்பியை அதிக வலிமையால் இழுத்தது. அதனால் கான் நீரில் விழுந்தான்.

அந்த உயிரினம் அவனை கடலில் ஆழமாக இழுத்து சென்றது. இந்த உயிரினம் ஒரு பெரிய நீர் பாம்பு என்று கான் உணர்ந்தான்!

கான் கடலில் வாழும் விலங்குகளை அனைத்தும் பார்த்தான்.

கானும் நீர் பாம்பும் ஒன்றாக கடலில் நீந்தினர்.

நீர் பாம்பு கானை பாறைக்கு அழைத்து சென்று அவனிடம் பேசியது.

“என்னுடைய முட்டை இந்த பெரிய பாறைக்கு கீழ் சிக்கியுள்ளது!” என்று அது சொன்னது.

கான் தள்ளி பார்த்தான், ஆனால் பாறை நகர மிக கனமாக இருந்தது!

கானிடம் ஒரு யோசனை தோன்றியது. அவன் அவனுடைய தோள்மேல் அரிசி பையை திறந்தான்.

அருகிலுள்ள கடல் விலங்குகள் கானுக்கு பக்கம் நீந்தி சென்று அரிசியை சாப்பிட ஆசைப் பட்டன. கானின் அரிசியை வேண்டிய அனைத்து விலங்குகளிடம் பாறையிலிருந்து முட்டையை விடுவிக்க உதவி கோரினான்.

அனைத்து கடல் விலங்குகளும் உதவி செய்ய ஒப்பு கொண்டன. அவைகள் பாறை நோக்கி பயணத்தை ஆரம்பித்தன.

அவைகள் பாறையை அடைந்துபோது, அவைகள் தங்களுடைய வலிமையால் தள்ளின.

பல முயற்சிக்கு பின், பாறை இறுதியாக நகர்ந்தது. கான் நீர் பாம்புடைய முக்கியமான முட்டையை பார்த்தான்.

கான் அவனுடைய கையை நீட்டி முட்டையை கவனமாக இழுத்தான்.

அது ஆரவாரமாக அசைத்தது. என்ன நடக்கிறது?

முட்டை வெளியே ஒரு குட்டி நீர் பாம்பு வந்தது. அது பாதுகாப்பாக வந்தது!

நீர் பாம்பு மிக மகிழ்ச்சியடைந்தது. கானும் மற்ற கடல் விலங்குகளும் கூட மகிழ்ச்சியடைந்தனர்.

எல்லா உற்சாகம் காரணமாக கான் சோர்ந்து இறுதியாக தூங்கிவிட்டான். நீர் பாம்பு அதனுடைய முதுகின் மேல் அவனை பாதுகாப்பாக சுமந்து சென்றது.

கான் திருப்பி ஆற்றங்கரையில் எழுந்தான். அவனுக்கு முன் காலியாக இருந்த வாலி இப்பொழுது மீன் நிறப்பப்பட்டு இருந்தது. அது எல்லாம் ஒரு கனவு தானா?