nilaavum thoppiyum

நிலாவும் தொப்பியும்

வெயில் நாளொன்றில், நீங்கள் தொப்பியொன்றை அணிந்து கொள்ள விரும்புவீர்களா? வேறு யாரெல்லாம் தொப்பி அணிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதை இந்த அழகிய புத்தகத்தை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

- Tharique Azeez

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நாங்கள் எல்லோரும் தசரா பண்டிகைக்காக உருவாக்கப்பட்ட சந்தைக்குச் சென்றோம்.

அப்பா சிந்துவுக்கு அழகான கண்ணாடி வாங்கிக் கொடுத்தார். எனக்கு அம்மா, ஓர்அ ழகிய நீலநிறத் தொப்பி வாங்கித் தந்தார். குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தார்கள்.

வீடு செல்கின்ற போது, மிக வேகமாகக் காற்று வீசியது. அது எனது தொப்பியை பறக்கச் செய்து விட்டது.

எனது தொப்பி, அங்கிருந்து பழைய அரச மரத்தின் கிளையொன்றில் மாட்டிக் கிடந்தது.

நான் ரொம்பவே அழுதேன். இராச் சாப்பாடும் சாப்பிடவில்லை.

அந்த நாளின் இரவுப் பொழுதில், வானத்தில் நிலா வந்தது. அது பழைய அரச மரத்தில் தங்கியிருந்த எனது தொப்பியைப் பார்த்தது.

எனது தொப்பியை அது போட்டுக் கொண்டது. நிலா சந்தோசத்தில் சிரித்தது. அதற்கு திரும்ப சிரித்துக் கொண்டேன்.

அடுத்த நாள், பாடசாலை விட்டு வந்த போது. அம்மா என்னிடம் மின்னுகின்ற சிவப்பு நிறத் தொப்பி ஒன்றைத் தந்தார். "உனக்காக நிலா அனுப்பியது" என்று சொன்னார்.

அந்த இரவு, நானும் நிலவும் எங்களது தொப்பிகளைப் போட்டுக் கொண்டு, சந்தோசத்தில் சிரித்து மகிழ்ந்தோம்.

நாம் மகிழ்ச்சியில் திளைத்தோம்.

சூரியனுக்குத் தொப்பி வேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்களா?

இன்றைக்கு நான் போட்டுள்ளது என்ன தொப்பி எனக் கண்டுபிடிங்க பார்க்கலாம்.