இன்று நிமா மகிழ்ச்சியாக இல்லை.
அப்பா அவளுக்கு ஒரு சோடி காலணிகளை வாங்கி தந்தார். ஆனால் அவள் இன்னும் மகிழ்ச்சியாக இல்லை.
அம்மா அவளுக்கு ஒரு பை வாங்கி தந்தார்.
ஆனால் அவள் இன்னும் மகிழ்ச்சியாக இல்லை.
நிமா இன்றைக்கு பள்ளிக்கு செல்வாள்.
ஆனால் அவளுக்கு பள்ளிக்கு போக விருப்பமில்லை!
அக்கா ஒரு பயிற்சி புத்தகம் கொடுத்தாள்.
ஆனால் நிமாவிற்கு இப்பொழுதும் பள்ளிக்கு போக விருப்பமில்லை.
அண்ணன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்தான். ஆனால் அவள் மகிழ்ச்சியாகவில்லை. "நான் பள்ளிக்கு போக மாட்டேன்", என்று நிமா கரைந்தாள். அம்மாவும் அப்பாவும் சிரித்தார்கள்.
நிமாவின் பெற்றோர் அவளைப் பள்ளிக்கு அழைத்து சென்றனர். நிமா அவளால் முடிந்த அளவு ஒரு ஆமையைப் போல மெதுவாக நடந்தாள்.
"இன்றைக்கு மட்டும் தான் பள்ளிக்கு போவேன். நாளை நான் போக மாட்டேன்", நிமா நினைத்து கொண்டே நடக்கிறாள்.
பள்ளியில், நிறைய புது நண்பர்கள் இருக்கிறார்கள்.
அவள் தினமும் பள்ளிக்கு போக ஆசைப்பட்டாள்!