தன்னுடைய நீளமான முடி தரையை உரச நீதா தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்தால்.
மரங்கள்,புல்வெளி மற்றும் அனைத்தும் தலைகீழாகவே தெரிந்தது.
அவளுடைய பாதங்கள் வானை பார்த்துக்கொண்டிருக்க அவ்வழியே லிட்டில் நவி வந்தான்.
நவி அவளிடம்" நான் உன்னை இங்கே முன்பே பார்த்திருக்கிரேன்.நீ எதற்காக தலைகீழாக தொங்கி கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.
பாதங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருக்க ,தன் முகத்தை முடி கற்றைகளிடையே மறைக்க முயன்றாள் நீதா.
எ-எ-எனக்கு தி-தி-திக்கு வாய்.நான் உங்களில் இருந்து வேறுபட்டவள்.உங்களோடு என்னால் பொருந்தமுடியாது என்று சோகமாக கூறினாள்.
நவி அவளுக்கு உதவி செய்ய வேண்டி, நீதாவின் கை பற்றி,தான் வழக்கமாக உட்காரும் ஓர் மரக்கிளைக்கு அழைத்துச்சென்றான்.
அம்மரக்கிளையில் வசதியாக உட்கார்ந்து ,அமைதியாக அருகில் உள்ள பூங்காவில் விளையாடுபவர்களை வேடிக்கை பார்த்தனர்.
அங்கே விளையாடும் குழந்தைகள் யாரும் ஒரே மாதிரி இல்லை.
ஏபி பருமனாக இருக்கிறான் .
சீய்யின் முகத்திலோ நிறைய புள்ளிகள்.
லாலாவோ ஒட்டகத்தை போல் உயரமாக இருக்கிறான்.
முரடன் பாம்பமிற்க்கோ சுந்தந்திரமாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
லூலூ அமைதியாக படித்துக்கொண்டிருக்கின்றாள் .
பிரேயாவின் விநோதமான முடியை பார்த்தாயா !
மேலும் டிம் எங்கேயும் மூக்குக்கண்ணாடியுடனே இருப்பான்.
என்னை பார். நான் வெறும் எலும்பும் தோலுமாக இருக்கிறேன்.
நீ நீயாக இருக்கின்றாய்.நீ தனியாக இல்லை.
இந்த உலகில் எல்லோரும் வித்தியாசமாகவே இருக்கின்றனர்.
இந்த வேற்றுமையிலேயே நானும் நீயும் ஒன்றுபடுகிறோம்.
இந்த உலகமே ஓர் நாடக மேடை.அதில் நடிகர்களாகிய நாம் ஒன்று போல் இருக்க முடியாது.
நீதா நிமிர்ந்து உட்கார்ந்து புதிதாய் கிடைத்த தன் தோழனுக்கு நன்றி உரைத்தாள்.
இனிமை இல்லாத தலைகீயில் நிலை மாறி இப்பொழுது நீதா எல்லோரோடும் விளையாடுகிறாள்.