noah kooda irunthal kavalaiye illai

நோவா கூட இருந்தால் கவலையே இல்லை!

சலீம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவனது செல்ல நாயான நோவா கூடவே இருக்கும். நோவா இருந்தால் சலீமுக்கு கவலையே இல்லை.

- Panchapakesan Jeganathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கோடை விடுமுறை தொடங்கியாச்சு.

சலீம் ஆனந்தமா இருந்திருக்கனும்.

இனிமே விளையாட நிறைய நேரம் கிடைக்கும்.

ஆனா என்னவோ தெரில சலீம் சோகமாவே இருந்தான். அவனுக்கு சாப்பிடவே பிடிக்கல. அவனால தூங்கவே முடியல.

நண்பர்களோட விளையாட பிடிக்கல.

அவனுக்குப் பிடிச்ச காமிக்ஸ படிக்க பிடிக்கல.

அவனோட செல்ல நாயான நோவாவோட ஒளிஞ்சி பிடிச்சி விளையாட கூட பிடிக்கல.

சலீமுக்கு நோவான்னா உயிர்.

நோவாவுக்கும் அதே மாதிரித்தான்.

நோவா இதுக்கு முன்னாடி ஒரு நாய்கள் காப்பகத்துல இருந்தான். சலீம் தான் நோவாவ அங்கே இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தான்.

அப்போதிலிருந்து நோவாவும், சலீமும் ஒன்னாவே இருப்பாங்க.

சேர்ந்தே வெளில சுத்தப் போவாங்க, விளையாடுவாங்க, சாப்பிடுவாங்க.

படுத்து தூங்குறது கூட சேர்ந்துதான்.

நோவா கூடவே இருக்குறது சலீமுக்கு பிடிக்கும்.எவ்வளவு சோகமா இருந்தாலும், நோவா பக்கத்துல  இருந்தா சோகமெல்லாம் பறந்து போயிடும்.

ஒருவேளை நோவாவுக்கு சோகம்னா என்னன்னு புரியும் போல. சலீம் வீட்டுக்கு வர்ரதுக்கு முன்னாடி நாய்கள் காப்பகத்துல இருந்தப்போ நோவா கூட சோகமாதான் இருந்தான்.

சலீம் சில நேரம் சோகத்திலேயே மூழ்கி இருப்பான்.

அவன் சோகமா இருக்குறப்போ

நோவாவும் அவன் பக்கத்திலேயே

சுருண்டு படுத்துக்குவான்.

சோகமா இருக்குற நாட்கள்ல கூட நோவாவ

கூட்டிகிட்டு வெளியே சுத்தப் போனா மகிழ்ச்சியா இருக்கும்.

நோவா கூட வெளியே சுத்திட்டு வந்தா

சலீமுக்கு எந்தக் கவலையும் இருக்காது.

நோவா கூடவே இருந்தா

மனசுக்கு ரொம்ப இதமா இருக்கும்.

எவ்வளவு சோகமா இருந்தாலும்

நோவா பக்கத்துல இருக்கான் அப்படிங்கிற நினைப்பே

சலீமுக்கு தைரியத்தை கொடுக்கும்.

காமிக்ஸ் படிக்க, கால்பந்து விளையாட,

ஒளிஞ்சு பிடிச்சு விளையாடன்னு,

கொஞ்ச கொஞ்சமா

சலீம் பழைய நிலைக்கு வர ஆரம்பித்தான்.

நோவா பக்கத்துல இருக்கும்போது

அவனுக்கு என்ன கவலை?