இதுதான் நோரா.
நோராவோட பொம்மை பேரு செல்லா.
நோராவுக்கு செல்லாவை ரொம்பப் பிடிக்கும். அவ எப்போதும் செல்லாவோடதான் விளையாடுவா. செல்லாவோடதான் ராத்திரி தூங்குவா.
ஒரு நாள் செல்லாவ காணோம். எங்க தேடியும் கிடைக்கலேனு நோரா ரொம்ப கவலைப்பட்டா.
நோராவோட அம்மா செல்லாவ துவைச்சிருக்காங்க.
நோரா அழுதுகிட்டே அம்மாகிட்ட போய்,"அம்மா என்னோட செல்லாவ காணோம்"னு சொன்னா.
நோரா தூங்கப் போனப்ப அம்மா செல்லாவ கொண்டு வந்து கொடுத்தாங்க.
நோரா ரொம்ப சந்தோசமாகி எழுந்து ஆட ஆரம்பிச்சுட்டா.
நோரா அம்மாவ கட்டிப்பிடிச்சுகிட்டா.
செல்லாவ துவைச்சுக் குடுத்தததுக்கு நன்றி சொன்னா.