oh ho

ஓ-ஹோ!

சில தாவரங்கள், விலங்குகளை மிகவும் நெருங்கிச் சென்றால் என்ன ஆகும்?அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி ஆபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவை முயற்சிக்கும். வேடிக்கையான இந்தப் புத்தகத்தில் அவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

- Elavasa Kothanar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வணக்கம். நான் ரொம்ப வேகமான ஆளு!

என் வாலைக் கொஞ்சம் அழுத்திப் பிடியுங்கள் பார்ப்போம்.

ஒ-ஓ!

தயவுசெய்து என் இலைகள் எதையும் தொடாதீர்கள்.

நான் மேகங்களை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

அடடா!

நான் எப்போதும் இவ்வளவு சின்னதாக இருக்கமாட்டேன்.முட்டைக்கோஸ் எனக் கொஞ்சம் கத்தித்தான் பாருங்களேன்!

புஃப்!

நான் பயப்படவே மாட்டேன், சிங்கத்தைப் பார்த்தாலும்கூட!

கிர்ர்ர்ர்ர் என முடிந்தளவு சத்தமாக கர்ஜியுங்கள் பார்ப்போம்.

சடக்!

பாடல்களைக் கேட்டால் எனக்கு என்னவோ செய்கிறது.ஊலலல்லா என்று தயவுசெய்து பாடாதீர்கள்.

ஸ்ஸ்ஸ்ஷூப்!

ஏய்! எங்கே, என்னை பயமுறுத்து பார்ப்போம்!ம்ம்ம்... சீக்கிரம்!

ஆஆஆ!

நான் அமைதியாக இருக்க வேண்டும். ஏன் என்று ஞாபகமில்லை.

அதனால் திடுதிப்பென்று எதுவும் செய்யாதீர்கள், சரியா?

ஒ-ஓ!

நீங்கள் இந்தப் புத்தகத்தில் பார்த்த கதாபாத்திரங்கள் இவர்கள்தான்!

மரப்பல்லி

முள்ளம்பன்றி

பச்சோந்தி

அலுங்கு

பேத்தை

ஆக்டோபஸ்

தொட்டாற்சிணுங்கி