நானும், என் அம்மாவும் சந்தைக்கு சென்றோம். அங்கு முதலில் காய்கறி சந்தைக்கு சென்று கத்தரி,முருங்கை ,உருளை ,தக்காளி ,பீட்ரூட் வாங்கினோம்.
இரண்டாவதாக பூச்சந்தைக்கு சென்று ரோஜா ,தாமரை ,மல்லி, முல்லை அனைத்தும் அழகாக இருந்தது.என் அம்மா அதில் சிலவற்றை மட்டும் வாங்கினாள்.
அடுத்ததாக பழச்சந்தைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு வாழை,ஆப்பிள்,மாதுளை,கொய்யா, ஆரஞ்சு ஆகியவை இருந்தன. எனக்குப் பிடித்த மாதுளையை நிறைய வாங்கி தந்தார்கள்.
அடுத்ததாக ஆடைகளின் உலகம் ப்பா! சூப்பர் அம்மா! அம்மா! எனக்கு அந்த ஆடையை வாங்கித்தாருங்கள் என்றேன். அவள் வாங்கித்தர மறுத்துவிட்டாள்.
என் அம்மா எப்போதும் இப்படித்தான் என எனக்கு கோபம் வந்தது. அவ்ளிடமிருந்து பூக்களின் பையை மட்டும் தாருங்கள் என வாங்கிக்கொண்டேன்.
வீட்டிற்கு வந்தவுடன் இதையாவது வாங்கித்தந்தார்களே! என மகிழ்ச்சி அடைந்தேன். அதுவும், எனக்கு பிடித்த மீனைப் பார்த்தவுடன் கோபம் எல்லாம் ஓடிப்போனது.