ரஷிகாவும் அவளின் அம்மாவும் எங்கு செல்கிறார்கள்.அனைத்தையும் எடுத்து
வைக்கிறார்களே! நாமும் அவர்களோடு செல்லலாமா?
அம்மா ரஷிகா கானளியில் உள்ள கயிற்றை நன்குக் கட்டிக்கொள் தடுக்கிவிழப்போகிறாய்?
பிறகு இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.அம்மாவோடு அவளும் வேகமாக நடந்தாள்.
வயல்வெளிகளை கடந்து செல்லுகையில் இருவர் அவர்களை இருசக்கரவாகனத்தில் அழைத்துச்சென்றனர்.
அங்கு அவளின் தோழி ஆனந்தியும் வந்திருந்தாள், அது ஒரு அழகிய இடம் இயற்கையின் பேரின்பம் அங்கு காணப்போகிறோம் என்பது போன்ற இடம் அது.
இருவரும் ஆற்றில் கல் எறிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். எதிரில் சூரியனின் ஒளிக்கற்றைகள் லேசான காற்று மிகுந்த மகிழ்ச்சியில் இருவரும் இருந்தனர்.
அடுத்ததாக பண்ணைக்குச் சென்றனர். அங்கு கோழி, பன்றி , ஆடுகளைப் பார்த்தனர். மிகவும் மகிழ்ந்தனர்.
ரஷிகா மற்றும் ஆனந்தி இருவரும் தண்ணீரில் விளையாடி விட்டு மகிழ்ச்சியாய் வந்தவர்களுக்கு அம்மா ஆசையாக உணவளித்தார்.
பிறகு , அம்மாவிடம் மிகவும் நன்றி அம்மா .இன்று முழுவதும் நான் என் தோழியோடும்,உங்களோடும் மகிழ்ச்சியாய் இருந்தேன் .