oru ciranta kutu

ஒரு சிறந்த கூடு

ஒரு பறவை தனக்காக ஒரு கூடு கட்ட முயற்சிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் அவள் ஒரு கூடு கட்டுகிறாள், ஏதோ ஒன்று அவளுக்கு தடையாக இருக்கிறது. அவள் என்ன செய்வாள்?

- Ilavarasan P

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குளிர்காலம் நெருங்குகிறது. ஒரு பறவை கூடு கட்ட முடிவு செய்கிறது.

அவள் சிறிய கிளைகளை சேகரித்து கவனமாக தன் கூட்டை கட்டுகிறாள்.

நிறைய கவனிப்பு மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு, கூடு தயாரானது. கூடு சூடாகவும் வசதியாகவும் உள்ளது.

பறவை மகிழ்ச்சியாக இருக்கிறது. அவள் படுத்துக் கொண்டு வசதியான குளிர்காலத்தை கனவு காணத் தொடங்குகிறாள்.

அவள் அயர்ந்து தூங்குங்கும்போது, ஏதோ நடுங்குவதை உணர்கிறாள்.

"காற்று கூட்டை சிறிது அசைக்கக்கூடும்." என பறவை நினைத்தது.

ஆனால் கூடு குலுங்கி நடுங்கி இன்னும் நிறைய குலுங்கியது.

பறவை கூட்டை விட்டு வெளியே பறந்தது. அடுத்த கணம், கூடு தரையில் விழுந்தது.

பறவை ஒரு யானை மரத்தைப் பயன்படுத்தி முதுகு சொறிவதைப் பார்க்கிறாள். அவள் மிகவும் எரிச்சலடைகிறாள்.

யானையே நீ செய்வது மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது என்று கோவமாக சொல்லிவிட்டு, அவள் பறந்து சென்றாள்.

அவள் ஒரு புதிய இடத்தைத் தேட ஆரம்பித்தாள். யானைகள் அவளை நெருங்க முடியாத இடமாக.

அவள் ஒரு புதிய கூட்டை கட்டத் தொடங்கினாள்.

கடின உழைப்பு மற்றும் கவனிப்புடன், அவள் ஒரு வீட்டைக் கட்டுகிறாள். சோர்வாகவே, அவள் அதில் தூங்கினாள்.

அவள் கண்களை மூடிக் கொண்டிருக்கும்போது, ​​இரண்டு பெரிய, வட்டமான கண்களைப் பார்க்கிறாள். அவை இரண்டும் அவளை பார்த்துக்கொண்டிருந்தது.

அது ஒரு ஓவியர்.

அவன் அவள் கூட்டை

எடுத்து எறிந்து விடுகிறான்.

பின்னர் அவன் ஒரு தூரிகையை

எடுத்துக்கொண்டு சுவற்றில்

ஓவியம்  வரைய தொடங்கினான்.

பறவை மிகவும் கோபமுற்றது. "உன்னுடைய செயல் மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது, மனிதனே!" என அவள் கோபமாக அவனிடம் சொல்லிவிட்டு பறந்து செல்கிறாள்.

அவளுடைய இதயம் கவலையுடன் கனமானது.

அவள் பறக்கும்போது, ​​பலூன் காற்றில் மிதப்பதைக் காண்கிறாள்.

மற்றொன்று!

அவள் கீழே பார்க்கிறாள், நிறைய, நிறைய பலூன்களைப் பார்க்கிறாள்!

பலூன்களைப் பார்த்தவுடன் பறவைக்கு ஒரு யோசனை வருகிறது.

கடின உழைப்பு மற்றும் கவனிப்புடன், அவள் ஒரு புதிய கூட்டை கட்டுகிறாள்.

இப்பொழுது, யாரும் அவளை தொந்தரவு செய்ய முடியாது.