oru petti churaa evvalavu periyadhu

ஒரு பெட்டிச் சுறா எவ்வளவு பெரியது?

பெட்டிச் சுறா ஒரு பெரிய மீன். அது எவ்வளவு பெரியது? ஒரு நீலத் திமிங்கலத்தை விடப் பெரியதா? அல்லது ஒரு டால்பினை விடச் சிறியதா? கடல்வாழ் உயிரினங்களை வைத்து, சில ஒப்பிடும் முறைகளை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது.

- கொ.மா.கோ. இளங்கோ

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு பெட்டிச் சுறா எவ்வளவு நீளமானது?

ஒரு பெருங் களவாய் மீனை விட நீளமானது.

ஆனால், நீளக் கடற்சொறி மீனை விடச் சிறியது.

ஒரு பெட்டிச் சுறா எவ்வளவு கனமானது?

100 டால்பின்களின் எடையை விட கனமானது.

ஆனால், கூனல் முதுகுத் திமிங்கிலத்தை விட லேசானது

ஒரு பெட்டிச் சுறாவால் எவ்வளவு ஆழம்வரை நீந்த முடியும்?

2,000 மீட்டர் ஆழம் வரை. ஆனால், அதனால் அரபிக்கடலின் ஆழத்தைத் தொட முடியாது.

ஓர் பெட்டிச் சுறாவால் எவ்வளவு வேகமாக நீந்த முடியும்?

கிரீன்லாந்து சுறாக்களை விட வேகமாக நீந்த முடியும்.

ஆனால், வாள் மீனை விட மெதுவாகவே நீந்தும்.

ஓர் பெட்டிச் சுறா எவ்வளவு பெரியது?

பெட்டிச் சுறா, நீலத் திமிங்கலத்தை விடச் சிறியது.

ஆனால், கடலில் உள்ள மற்ற மீன்களை விடப் பெரியது.

ஒப்பிடுவது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை அளவிடவும் உதவுகிறது.

இவை சில ஒப்பிடும் முறைகள்:

மெதுவாக

வேகமாக

உயரமானது

சிறியது

கனமானது

பெரியது