our family

எங்கள் குடும்பம்

குடும்பம் உறவினர்களை பற்றி ஒரு கதை.

- Keerthi Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என் பெயர் நேஹா.எங்கள் குடும்பம் ஒரு சுவாரசியமான குடும்பம். அவர்களை பார்க்க வேண்டுமா ?

இவர்கள் தான் என் பெற்றோர். என் அப்பாவும் அம்மாவும் தபால் நிலையத்தில்  பணி புரிகிறார்கள்.

இது தான் என் அண்ணா, ராஜ்  மற்றும் என் அக்கா, ரோஹிநீ.  நாங்கள் எல்லோரும்  ஒற்றுமையாக  விளையாடுவோம்,  குறிப்பாக  விடுமுறைகளில்!

இது தான் என் தந்தைவழி மற்றும் தாய்வாழி தாத்தா பாட்டி.  எனக்கு அவர்கள் வந்தால் பிடிக்கும்.

இவர்கள்  என் அப்பாவின்  சகோதரர்கள்.  அவர்கள்  என் சித்தப்பாக்கள்.  என் அப்பா தான் இவர்களில் மூத்தவர்!

இவர்கள்  என் அப்பாவின் சகோதரிகள். அவர்கள் என் அத்தைகள், சாந்தா   மற்றும் சுசீலா. அந்த இளஞ்சிவப்பு உடையில் உள்ள  பெண் லதா. அவள் சுசீலா அத்தையின் மகள்.

ஓ ,நான் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன் . இது என் நாய், நீலு. அவளுக்கு இரண்டு வயது ஆகிறது. எல்லோருக்கும்  அவளை பிடிக்கும் !

இது தான் என் குடும்பம். இப்பொழுது உங்களை பற்றி கூறுங்கள்!