அருண் பள்ளிக்குச் செல்ல தயார் ஆனான்.
அவன் அம்மா வெளியூர் சென்று விட்டார்கள். அதனால் அவன் அப்பா காலை உணவிற்கு பால் கஞ்சி செய்தார்.
"அம்மா செய்யும் பால் கஞ்சிதான் முதல் தரமானது," என்று அருண் கூறினான்.
கஞ்சி அருணுக்கு விளையாட சக்தி கொடுத்தது.
கஞ்சி தயார் ஆகி விட்டது.
கஞ்சியில் அப்பா அன்புடன் பாலை ஊற்றினார்.
"அப்பா, இந்த கஞ்சிக்கு இன்னும் சக்கரை தேவை," என்று அருண் கூறினான்.
"அம்மா செய்யும் கஞ்சி, அப்பா செய்த கஞ்சியைவிட நன்றாக இருக்கும்," என்று அருண் யோசித்தான்.
"அப்பா, இன்னும் கொஞ்சம் சக்கரை கொடுங்க," என்று அருண் கேட்டான்.
அப்பா, அருண் கஞ்சியில் இன்னும் கொஞ்சம் சக்கரைப் போட்டார்.
"ஐயோ அப்பா, என் கஞ்சியில் உப்பு போட்டு விட்டீர்கள்," என்றான் அருண்.
"அம்மா எப்போது வீட்டிற்கு வருவார்கள்," என்று அருண் ஏக்கமாக கேட்டான்.