சோனு குளிச்சிட்டு நீல நிற சட்டை போட்டிருக்கான்.
கவிதாவும் ரவியும் நீல நிறத்திலே கால் உரைகள் போட்டிருக்காங்க.
அடடா! நாங்க இன்னைக்கு ஒரே நிறத்திலே உடை போட்டிருக்கோம்.
வாங்க இன்னைக்கு நாம இன்னும் வேறு சில நிறங்கள் பற்றி பார்க்கலாம்.
இதோ இருக்கு, கமலா பாட்டியோட சிவப்பு மிளகாய்.
" பிள்ளைகளா! அத தொடாதீங்க!" அது ரொம்ப காரம்.
ஆகா! பாபு அண்ணா, ஊதா நிற கத்தரிக்காயை வெட்டுறார். அது எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.
ராணி அக்கா கடையிலே சுவையான எலுமிச்சை பழச்சாறு மஞ்சள் நிறத்திலே இருக்கு.
நிறங்கள் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. சாப்பிடவும் ரொம்ப பிடிக்குது. இது என்ன? இளஞ்சிவப்பு நிறத்திலே இருக்கு.
இதோ இருக்கு குளிர்ந்த பால் கட்டி. அது வெள்ளை நிறத்திலே இருக்கு.
நான் பச்சை நிறத்திலே இருக்கும் குளிர் பானத்தை குடிக்க போறேன். உனக்கு வேணுமா?
அதுக்கு பிறகு கொஞ்சம் காப்பி நிற பேரீச்சம் பழங்கள் சாப்பிடலாம்.
ராமு அண்ணா கடையிலே கொய்யா பழங்கள் கூட அருமையா இருக்கும்.
வெளிய பச்சை நிறம்.
உள்ளே இளஞ்சிவப்பு.
அதுகூட வெள்ளை நிற உப்பு. எப்படி இருக்கும் தெரியுமா?