பாத்தி ஒரு சிறுமி காற்றைப் போல ஓடுபவள், எப்போதும் சிரிக்க விரும்புபவள், அவள் சொன்னபடி செய்ய எப்போதும் கடினமாக முயற்சி செய்பவள்.
ஒரு நாள், பாத்தி தனது தந்தையுடன் சில களைகளை அகற்ற பண்ணைக்கு சைக்கிளில் சென்றாள்.
விரைவில், பாத்தி சோர்வடைந்தாள். பாத்தி, “தந்தையே, நான் மிகவும் சோர்வாகவும் இருக்கிறேன். நான் மாமரத்தின் கீழ் உட்காரலாமா?
தந்தை, “ஆம் பாத்தி, நீ அங்கே உட்காரலாம். ஆனால், தயவுசெய்து, இன்று எந்த மரங்களிலும் ஏற வேண்டாம்.”
பாத்தி மாமரத்தின் கீழ் அமர்ந்தாள்.பாத்தி மேலே பார்த்தாள்.அவள் ஒன்றைப் பார்த்தாள் ... இரண்டு ... மூன்று பழுத்த மாம்பழங்கள்!
பாத்தி தன் தந்தையைப் பார்த்தாள். அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவளை கவனிக்கவில்லை. எனவே பாத்தி அமைதியாக மாமரத்தில் ஏற ஆரம்பித்தாள்.
பாத்தி நல்ல ஒரு பெரிய கிளையில் உட்கார்ந்து கொண்டு நிறைய பழுத்த மாம்பழங்களை சாப்பிட்டு ஓய்வெடுக்க நினைத்தாள். அவ்வாரே செய்தாள்.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு, பாத்தி கீழே இறங்கினாள்...மற்றொரு மரத்தைப் பார்க்க மட்டுமே.இந்த மரத்தில் ஏதோ பழுப்பு நிறத்தில் துளித்துளியாக மரப்பட்டை கீழே சொட்டுகிறது.
அது தேன்! பாத்தி தேனை விரும்பினாள். ஆனால் அவள் தேனீக்களை விரும்பவில்லை. பாத்தி மேலே பார்த்தபோது ஒரு சிறிய தேனீவைப் பார்த்தாள். பாத்தி, “ஒரே ஒரு சிறிய தேனீ மட்டுமே உள்ளது என நினைத்தாள். அது நான் மரத்தில் ஏறி தேனைத் தேடினால் என்னை காயப்படுதாது என்ன நினைத்தாள்.”
பாத்தி தன் தந்தையைப் பார்த்தாள்.
அவளை அவர் கவனிக்கவில்லை.
எனவே பாத்தி மரத்தின் உச்சியில் ஏறி ஆழமான துளையிலிருந்து தேனை எடுத்தாள்.
பாத்தி, “நான் இந்த நல்ல, பெரிய கிளையில் உட்கார்ந்து, ஓய்வெடுக்கவும், இனிப்பான தேன் நிறைய சாப்பிடவும் இது ஒரு நல்ல இடம் என நினைத்தாள்.”
அதனால் அவள் உட்கார்ந்து சாப்பிட்டாள்.
பாத்தி தேனை சாப்பிட்ட பிறகு, மரத்தின் கீழே ஏறினாள்.
பின்னர் அவள் நிறையதேனீக்கள் பறந்து வருவதை பார்த்தாள்.
ஸ்ஸ்ஸ்ஸ்! ஸ்ஸ்ஸ்ஸ்!
அவள் தேனீக்களை விட்டு ஓடினாள்.
பாத்தி தன் தந்தையிடம் ஓடினாள்.
பாத்தி முனகிக்கொண்டும் துடித்துக்கொண்டும் இருந்தாள்.
“பாத்தி, நீ எங்கே சென்றாய்?” என்று தந்தை கேட்டார்.பாத்தி எங்கே இருந்தாள் என்று சொல்ல விரும்பவில்லை.
எனவே, அவள், “தந்தையே, பாருங்கள் என்னிடம் ஒரு மாம்பழம் இருக்கிறது. நீங்கள் அதை சாப்பிட விரும்புகிறீர்களா?”
அதற்கு தந்தை, “இல்லை, நன்றி, பாத்தி. நாம் இப்போது வீட்டிற்கு செல்ல வேண்டும். மழை பெய்யப்போகிறது.” என்றார்.
வீட்டிற்கு செல்லும் வழியில், பாத்தி தனது தந்தையின் பின்னால் சைக்கிளில் அமர்ந்தாள். மழை பெய்யத் தொடங்கியது.
தந்தை மிதிவண்டியில் மிக வேகமாக சென்றார்.
சைக்கிள் பாதை மாறியது. தடுமாறியது!
சைக்கிள் பாத்தியின் காலில் விழுந்தது.
வீட்டில், தாயும் பாட்டியும் பண்ணையில் அன்றைய நாள் பற்றி கேட்டார்கள். "பாத்தி ஒரு மரத்தில் ஏறினாள்" என்றார் தந்தை.
"தந்தை மிதிவண்டியில் மிக வேகமாக சென்றார், அது என் காலில் விழுந்தது" என்றாள் பாத்தி.
"ஒரே சுட்டி", குறும்பு பாத்தி என்றாள் அம்மா.
"சுட்டி", குறும்பு பாத்தி" என்றார் பாட்டி.
உன் காலை முதலில் கவனிக்க வேண்டும்."
அவ்வாரே அவர்கள் செய்தார்கள்.
அதுவே அதன் முடிவு.