காலை வணக்கம்!எழுந்திரிக்க நேரம் ஆகிவிட்டது.
நான் எழுந்திருக்க விரும்பவில்லை.
நான் பெரிய வேலையை செய்ய (பள்ளிக்குச் செல்வது) விரும்பவில்லை.
நான் பல் துலக்க விரும்பவில்லை!
நான் குளிக்க விரும்பவில்லை! நான் இட்லி சாப்பிட விரும்பவில்லை!
நான் பள்ளி செல்ல விரும்பவில்லை!
ம்ம்ம்...
ஆனால், உங்கள் பள்ளியில் இன்று உங்களை மிருகக்காட்சிசாலைக்கு சுற்றுலா கூட்டிச் செல்கிறார்கள்!
எனக்கு சர்க்கரையோடு இட்லி சாப்பிட பிடிக்கும்!நான் பள்ளி செல்ல விரும்புகிறேன்!எனக்கு குளிக்கும் போது பாட பிடிக்கும்!எனக்கு பல துலக்க புதிய ப்ருஷ் உபயோகிக்கப் பிடிக்கும்.
ஐயோ! எனக்கு அவசரம். நான் பள்ளி செல்ல வேண்டும்.இதோ, இப்போதே நான் ராக்கெட் போல பறந்து வருகிறேன்... தயவு செய்து வழிவிடுங்கள்.நான் வரும் வழியில் குறுக்கே நிற்காதீர்கள்.