நான் உங்களுக்கு பனை மரத்தை பற்றி சொல்கிறேன்.
எல்லாம் உலர்ந்து போனாலும் இந்த மரம் உயிர் வாழும்.
பனை மரத்தின் நிழல் எப்பொழுதும் குளிர்மையாக இருக்கும்.
நாங்கள் இந்த பனை மரத்தின் பழங்களை உண்போம்.
நாங்கள் எங்கள் வீடுகளின் கூறைகளுக்கு பனை இலைகளை உபயோகிப்போம்.
நாங்கள் பனை இலைகளால் துடைப்பங்கள் மற்றும் பாய்கள் தயாரிப்போம்.
நாங்கள் பனை மரத்தின் விதைகளை எரிபொருளாக பயன்படுத்துவோம்.
பனை மரம் ஏன் முக்கியமானது என்று உங்களுக்கு தெரிகிறதா?