நான்கு நண்பர்கள் தங்கள் பொம்மைகளை வைத்து பந்தயம் வைக்க விரும்பினார்கள்.
வீனாவிடம் ஒரு பச்சை கார் இருந்தது.
மீனா ஒரு மஞ்சள் நிற ஆட்டோ வைத்து இருந்தாள்.
சாஞ்சுவிடம் ஒரு சிகப்பு பேருந்து இருந்தது.
மஞ்சு ஒரு நீல நிற லாரி வைத்து இருந்தான்.
தயாராகு 1 - 2 - 3 , செல்! இதோ லக்கி வருகிறது .
ஹாஹா, லக்கியும் பந்தயத்தில் சேர்ந்துள்ளது.
பாருங்கள், பாருங்கள்!
லக்கி எல்லாவற்றையும் விட வேகமாக ஓடுகிறது.
லக்கி பந்தயத்தில் வென்றது.