பன்றி ஒன்றின் வாலு ஓடிவிட்டது...
அதைத் தேடிக் காட்டில் அலைகின்றது!
குரங்கு ஒன்று பார்த்து உதவுகின்றது...
காளானை வாலாய்க் கொடுக்கின்றது!
பன்றி ஒன்றின் வாலு
ஓடிவிட்டது...
அதைத் தேடி நகரில்
அலைகின்றது...
காக்கை ஒன்று பார்த்து
உதவுகின்றது...
பலூனில் வாலைக்
கொடுக்கின்றது!
பன்றி ஒன்றின் வாலு
ஓடிவிட்டது...
அதைத் தேடிக் கடலில் அலைகின்றது...
ஆமை ஒன்று பார்த்து
உதவுகின்றது...
பாசியை வாலாய்க்
கொடுக்கின்றது!
பன்றி ஒன்றின் வாலு
ஓடிவிட்டது...
அதைத் தேடிப் பனியில்
அலைகின்றது...
கடமாப் பார்த்து
உதவுகின்றது...
காலுறையை வாலாய்க் கொடுக்கின்றது!
பன்றி ஒன்றின் வாலு
ஓடிவிட்டது...
அதைத்தேடி அலைந்து
ஓய்ந்துவிட்டது...
வீடு வந்து படுத்துத்
தூங்கிவிட்டது...
வாலும் திரும்பி
வந்துவிட்டது!