pappukutty pannaiyile

பப்புக்குட்டி பண்ணையிலே - சிறுவர் பாடல்

The animals in pappukutty's farm are up to mischief. Sing along with them in this rhyme!

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பப்புக்குட்டி பண்ணையிலே

அ-ஆ-இ-ஈ-ஊ!

பிராணிகள் ஆறு வசித்தனவே

அ-ஆ-இ-ஈ-ஊ!

பன்றி சேற்றில் உருண்டதே

கோழி குப்பையைக் கிளறியதே

மாடு பசியில் குடைந்ததே

ஆடு சுற்றித் திரிந்ததே

வாத்து

ஓடி

ஒளிந்ததே

நாய்க்குட்டி

பார்த்து

மிரண்டதே!

பப்புக்குட்டி பண்ணையிலே...

அ-ஆ-இ-ஈ-ஊ!