ஒரு ஊரில் அழகான ஒரு நாய்க்குட்டி இருந்தது. அதற்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. தினமும் பசியை போக்க உணவைத் தேடித்தேடி அலைந்தது. உணவு எங்கும் கிடைக்கவில்லை..
ஒரு நாள் உணவைத் தேடிக்கொண்டு பக்கத்து தெருவிற்கு சென்றது.அங்கும் அதற்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு பலூன் மட்டும் அந்த தெருவில் இருந்தது.அதை தன் அருகில் வைத்துக்கொண்டு சற்று நேரம் உறங்கியது.
பின்னர் அந்த வழியாக வந்த பவித்ரா என்பவள் பப்பியை பார்த்தாள்.பப்பி மிக சோர்வாக இருந்ததைக் கண்டு வருந்தினாள். பின் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று உணவு கொடுத்து தன்னுடைய நண்பன் போல் அதை வளர்த்து வந்தாள்.