paravaigal paesum

பறவைகள் பேசும்

கவனமாக கேட்டுப் பாருங்கள்! பறவைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்பதத் தெரிந்து கொள்வீர்கள்.

- Malarkody

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பறவைகள் பேசுகின்றன. அவை நிறையவே பேசுகின்றன!

க்வாஆஆஆ! க்வாஆஆஆ!

செம்பருந்து பசியோடு உள்ள குழந்தையைப் போல் அழுகிறது.

க்வாஆஆஆ! க்வாஆஆஆ!

ட்வீஈஈஈஈஈ! ட்வீஈஈஈஈஈ! சீகார்ப் பூங்குருவி மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தையைப் போல் சீழ்க்கை அடிக்கிறது. ட்வீஈஈஈஈஈ! ட்வீஈஈஈஈஈ!

ஹு ஹு ஹு ஹு! ஹு ஹு ஹு ஹு!

சின்ன தவிட்டுப் புறா யாரோ கிச்சு கிச்சு மூட்டியது போல் சிரிக்கிறது. ஹுஹு ஹு ஹு! ஹு ஹு ஹு ஹு!

பக்! பக்! பக்! செம்மார்புக் குக்குறுப்பான் உலோகத்தை சுத்தியலால் அடிப்பது போல் சப்தமிடுகிறது. பக்! பக்! பக்!

க்வாஆஆஆ! ட்வீஈஈஈஈஈ! ஹு ஹு! பக்! இது யாருடைய சப்தம்? இது எல்லாப் பறவைகளையும் போல சப்தமிடும் துடுப்புவால் கரிச்சான்! க்வாஆஆஆ! ட்வீஈஈஈஈஈ! ஹு ஹு! பக்!

நமக்கு பறவைகள் என்ன பேசுகின்றன என்று தெரியாதுதான். ஆனால் பேசுவது எந்தப் பறவை என்று தெரியும்.

இக்கதையில் வரும் பறவைகளின் ஆங்கிலப் பெயர்கள்

செம்பருந்து - Brahminy kite

சீகார்ப் பூங்குருவி - Malabar whistling thrush

தவிட்டு புறா - Laughing dove

செம்மார்புக் குக்குறுப்பான் - Coppersmith barbet

துடுப்புவால் கரிச்சான் - Racket-tailed drongo