மரங்கொத்தியைப் பார்த்திருக்கிறீர்களா?
மரங்கொத்தியின் கடினமான கூரிய அலகு மரத்தைத் துளையிடப் பயன்படுகிறது.
குருவியின் அலகு
குருவியின் குட்டையான அலகு பூச்சிகளைக் கொத்தித் தின்னப் பயன்படுகிறது.
கிளியின் அலகு...
கிளியின் வளைந்த கூரிய அலகு விதைகளை உடைக்கப் பயன்படுகிறது.
வாத்தின் அலகு
வாத்தின் தட்டையான அலகு நீரிலிருந்து உணவைப் பிடித்து உண்ணப் பயன்படுகிறது.
கழுகின் அலகு...
கழுகின் கூரான, நுனி வளைந்த, உறுதியான அலகு சிறு உயிரிகளின் தோலைக் கிழித்து உண்ணப் பயன்படுகிறது.