paththin magimai

பத்தின் மகிமை

வாசகர்களை பிரபஞ்சத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு எண்ணும் புத்தகம் இது.

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

10

தேவதைகள் ஒரு குண்டூசியின் தலையில் நடனமாடுகின்றன

9

ஊசிகள் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தை தைக்கத் தேவை

8

பிரகாசமான நட்சத்திரங்கள் ஒரு குர்தாவின் மீது

7

நண்பர்கள் விருந்துக்காக உடையணிந்து வந்திருக்கிறார்கள்

6

மெழுகுவர்த்திகள் ஒரு கேக்கின் மேலே

4

கைகள் அவற்றைத்துரத்தத் தட்டுகின்றன

5

கிளிகள் அதை சுவைக்கப்பறந்து வருகின்றன

3

குழந்தைகள் தூக்கக் கலக்கத்தோடு படுக்கப் போகிறார்கள்

2

படுக்கை நேர கதைகள்போதவே போதாது

1

பெரிய்ய்ய கொட்டாவி

ஓ!

ஓ!

1

நிலா இருக்கிறது இரவு வானத்தில்

2

நரிக் குட்டிகள் காட்டில் விளையாடுகின்றன

3

அலறல்கள் போடுகிறது மரத்திலிருக்கும்வயதான ஆந்தை

4

வவ்வால்கள் வேட்டையாட பறந்து செல்லுகின்றன

5

அந்துப்பூச்சிகள் ஒளியை நோக்கி பறக்கின்றன

6

மலைகள் வானைத் தொட்டு நிற்கின்றன

7

கடல்களில் திமிங்கலங்கள் பாடித் திரிகின்றன

8

கிரகங்கள் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி சுழலுகின்றன

9

நூறு மில்லியன் மைல்களுக்கு அப்பால் தெரியும் நம் வீடு ஒரு குட்டி நீலப் புள்ளியாக

10

தேவதைகள் ஒரு குண்டூசியின் தலையில் நடனமாடுகின்றன