ஆசிரியர் கீதா நிறைய கணக்கு கொடுத்தார்.
2 + 2 எவ்வளவு? என்று கேட்டார்.
நான் 4 என்று சொன்னேன்.
நான்கும் இரண்டும் எவ்வளவு என்று கேட்டார்.
நான் ஆறு என்று சொன்னேன்.
ஆறுடன் இரண்டைச் சேர்த்தால் என்ன வரும் என்று கேட்டார்.
நான் எட்டு என்று சொன்னேன்.
"அருமை முனியா! இப்போது நீ கணக்கு நன்றாக செய்கிறாய்." என்று ஆசிரியர் சொன்னார்.
அப்போது பள்ளி மணி அடித்தது.
நான் புத்தகத்தை எடுத்து பையில் வைத்தேன்.
"என் பென்சில் எங்கே?"
மேசைக்கு அடியில் தேடினேன். ஆனால், அங்கு பென்சில் இல்லை.
எல்லோரும் அவர்கள் பையில் தேடினார்கள். அங்கும் பென்சில் இல்லை.
எங்கே போயிருக்கும்? எல்லோரும் கேட்டார்கள்.
பென்சில் கிடைத்துவிட்டது !
எங்கே, எங்கே என்று ஆசிரியர் கேட்டார்.
அதோ, அங்கே, உங்கள் தலையில்.
ஆசிரியர் சிரித்துக்கொண்டே பென்சிலைக் என்னிடம் கொடுத்தார்.