periya siriya vidayangal

பெரிய - சிறிய விடயங்கள்

பல விடயங்களைக் கொண்டு உள்ளது இந்த உலகம் - பெரியது, சிறியது மற்றும் நடுத்தரமானது. பெரிய கருத்தை உடைய சிறிய புத்தகம்.

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உலகம் எங்கும் உயிர் இனங்களும் பொருள்களும் நிறைய உள்ளது.

பெரியது சில. சிறியது சில. பெரும்பாலும் நடுதரமானது.

இவை நமக்குத் தெரிந்த சில பெரிய விடயங்கள்.

இவை நமக்குத் தெரிந்த சில சிறிய விடயங்கள்.

சில விடயங்கள் பார்க்க பெரிதாக தெரிவது உண்டு.  ஏன் என்றால் அவற்றை சுற்றி சிறிய விடயங்கள் இருப்பது உண்டு.

அந்த பெரிய விடயங்களை சுற்றி மேலும் பெரிய விடயங்கள் இருக்கும் போது, அதுவே சிறியதாக தெரிவதும் உண்டு.

எது அருகில் இருந்து பெரியதாக தெரிகிறதோ,

அதுவே தூரத்தில் இருந்து சிறியதாக தோன்றலாம்.

விடயங்கள் பெரிய விடயங்களை உருவாக்குகின்றன.

பெரிய விடயங்கள் மிக பெரிய விடயங்களை உருவாக்குகின்றன .

மிக பெரிய விடயங்கள் பிரமாண்டமான விடயங்களை  உருவாக்குகின்றன.

பிரமாண்டமான விடயங்கள் அருமையிலும் அருமையான -  பேராற்றல் உடைய  அசாதரமான விடயங்களை  உருவாக்குகின்றன.

விடயங்கள் சிறிய விடயங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

சிறிய விடயங்கள் மிகச் சிறிய விடயங்களைக்  கொண்டு உருவாக்கப்படுகின்றன.

மிகச் சிறிய விடயங்கள்  சின்னஞ்சிறிய - நுண்ணிய

அணு அளவு  விடயங்களைக்கொண்டு உருவாக்கப்படுகின்றன .

ஆனால் இந்த மிகச்  சின்னஞ்சிறிய - நுண்ணிய

அணு அளவு விடயங்களைக்கொண்டு  அருமையிலும் அருமையான - பேராற்றல் உடைய அசாதரணமான விடயங்களை   உருவாக்கி இந்த வேறுபாடுகள் கொண்ட அழகான பெரிய - சிறிய உலகம்.