பன்றியும்,பட்டாம்பூச்சியும் நல்ல நண்பர்கள்.பட்டாம்பூச்சியைப் பார்த்து பன்றியும்
பறக்க ஆசைப்பட்டது.என்ன நடக்கப்போகிறது என்று இனிப்பார்க்கலாம்.
அடடா! நீ எவ்வளவு உயரத்தில் பறக்கிறாய்? எனக்கும் பறக்க ஆசையாக உள்ளது.
உன்னைப்போன்று நானும் பறக்கப்போகிறேன் என்றது கொழுகொழு பன்றி.
அது எப்படி உன்னால் முடியும்? பட்டாம்பூச்சி ஆச்சரியமாக கேட்டது.
உனக்கு இறக்கைகள் இருக்கிறது?நீ பறக்கிறாய் . நானும் இந்த பனைஓலைகளை இறக்கைகளாகக் கொண்டு பறக்கப்போகிறேன் என்றது குட்டி பன்றி.
இரு கைகளிலும் பனைஓலைகளைக் கட்டிக்கொண்டு நான் பறக்கப்போகிறேன்! நான் பறக்கப்போகிறேன்! என மகிழ்க்சியாகக் கூறிக்கொண்டே கைகளை அசைத்தது.
திடீரென்று ,பன்றி எதிர்ப்பார்க்காதவண்ணம் பறக்க முடியாமல் கைகளை விசீயது.
அச்சச்சோ! பாவம்! இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
குட்டி பன்றி குளத்தில் விழுந்துவிட்டதே! அப்போது அதன் முகம் வாடிப்போனது. என்னால் பறக்க முடியாதா? என்றது. பட்டாம்பூச்சி கவலைக்கொள்ளாதே!உன்னால் என்ன முடியுமோ அதை செய் என்றது.