எங்கு பார்த்தாலும் பூச்சாண்டிகள்இங்கே, அங்கே, உன் தலை முடியிலும் பூச்சாண்டிகள்
கூர்நகப் பாதம் கொண்ட பூச்சாண்டிகள்
புசுபுசுப் பாதம் கொண்ட பூச்சாண்டிகள்
எல்லாப் பற்களும் கொண்ட பூச்சாண்டிகள்
எக்கச்சக்கமாக இனிப்பைத் தின்ற பூச்சாண்டிகள்
முகத்தைச் சுளிக்கும் பூச்சாண்டிகள் நாற்றமடிக்கும் ஏமாற்றும் பூச்சாண்டிகள்
அ...ச்சூ என்று தும்மும் பூச்சாண்டிகள்
மூக்கு நிறைய சளி வைத்திருக்கும் பூச்சாண்டிகள்
பல் இளிக்கும் பூச்சாண்டிகள்
தொப்பை குலுங்கி ஆடும் பூச்சாண்டிகள்
இரவில் மின்னும் பூச்சாண்டிகள்
பளிச்சென்ற வெளிச்சத்திலும் பார்க்க முடியாத பூச்சாண்டிகள்
விருந்தை விரும்பும் பூச்சாண்டிகள்
உன் கை கால்களைக் கடிக்கும் பூச்சாண்டிகள்
ஒளிந்து வரும் பூச்சாண்டிகள்
பேதி பிடித்த பூச்சாண்டிகள்
பறக்கும் பூச்சாண்டிகள்
உன் ஜன்னலில் எட்டி வேவு பார்க்கும் பூச்சாண்டிகள்
சுற்றித் திரியும் பூச்சாண்டிகள்
உன் வீட்டிலும் குடியிருக்கலாம் சில பூச்சாண்டிகள்!