எவ்வளவு பூனை உள்ளது?
0
பூஜ்யம் பூனைகள்.
ஒரு பூனையும் இல்லை.
எவ்வளவு பூனை உள்ளது?
1
ஒரு பூனை.
ஒரு கருப்பு பூனை.
ஒரு கருப்பு பூனை சிவப்பு மாமிசம் சாப்பிடுகிறது.
எவ்வளவு பூனை உள்ளது?
2
இரண்டு பூனைகள்.
வெள்ளை மற்றும் சாம்பல் நிற பூனைகள்.
அந்த பூனைகள்
பூக்களோடு விளையாடின.
எவ்வளவு பூனை உள்ளது?
3
மூன்று பூனைகள்.
சாம்பல், பழுப்பு, மற்றும் புள்ளி போட்ட பூனைகள்.
அவை மேஜை மேல் ஏறி இறங்கி விளையாடின.
எவ்வளவு பூனை உள்ளது?
4
நாலு பூனைகள்.
நாலு பூனையும் பாலின் நெருங்கிய நண்பர்கள்.
எவ்வளவு பூனை உள்ளது?
5
ஐந்து பூனைகள்.
ஐந்து பூனைகள் பொது அறையில் விளையாடின.
எவ்வளவு பூனை உள்ளது?
6
ஆறு பூனைகள்.
ஆறு பூனைகள் ஒன்றாய் உட்கார்ந்து படம் பார்த்தன.
எவ்வளவு பூனை உள்ளது?
7
ஏழு பூனைகள்.
ஏழு பூனைகள் மதில் சுவருக்குள் விளையாடின.
எவ்வளவு பூனை உள்ளது?
8
எட்டு பூனைகள்.
எட்டு பூனையும் நாய் வேண்டாம் என்றன.
மேலே பார். மரத்தில் ஒரு பூனை மாட்டிக்கொண்டது. "நான் உன்னை காப்பாற்றுகிறேன்," என்றான் பால்.
"அம்மா, இந்த பூனையையும் நாம் வீட்டில் வளர்க்கலாமா," என்றான் பால்.
மொத்தம் எவ்வளவு பூனை?
9
"ஒன்பது பூனைகள் மிகவும் அதிகம்," என்றார் அம்மா.