ஆஷி வீட்டிற்கு வெளியில் பாண்டி(நொண்டி) விளையாடிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில், யாரோ வலியில் துடித்து அழுகிற சத்தம் கேட்டது.
அவள் அங்கும் இங்கும் சுற்றிச்சுற்றிப் பார்த்தாள்.
ஒரு சிறிய பூனைக்குட்டி சாலையின் ஓரத்தில் கிடந்தது.
ஆஷி அந்தப் பூனைக்குட்டியின் பக்கத்தில் சென்று பார்த்தாள்.
பூனைக்குட்டியின் கால் அடிபட்டு இருந்தது.
அவளின் அம்மாவைக் கூப்பிட்டாள்.
அம்மா வெளியே வந்து அந்த பூனைக் குட்டியைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
அம்மா பூனைக் குட்டியின் காயத்திற்கு மருந்து போட்டு காலில் கட்டு போட்டு விட்டார்.
ஆஷி ஒரு சின்ன பாத்திரத்தில் பால் கொண்டு வந்தாள். அவளின் கையில் இருந்த பாலை அம்மா வாங்கி, பூனைக் குட்டிக்கு ஊட்டினாள். பாலைக் குடித்ததும், பூனைக் குட்டி அம்மாவின் மடியிலே உறங்கியது.
அந்த நாள் முதல், பூனைக் குட்டி ஆஷி கூடவே வாழத் தொடங்கியது.