1.அ. இந்தப் பூங்காவிலிருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர்.
1.ஆ. இந்தப் பூங்காவிலிருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவில்லை. ஏனென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
2.அ. இந்தக் குழந்தைகள் ஒரு குழுவாக சேர்ந்து விளையாடுகிறார்கள்.
2.ஆ. இந்தக் குழந்தைகள் ஒரு குழுவாக சேர்ந்து விளையாடவில்லை. ஏனென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
3.அ. இந்த மக்கள் சுத்தமான பூங்காவில் நடக்கின்றனர்.
3.ஆ. இந்த மக்கள் அலங்கோலமான பூங்காவில் நடக்கின்றனர். ஏனென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
4.அ. இந்தப் பூங்காவில் குழந்தைகள் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
4.ஆ. இந்தப் பூங்காவில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
5அ. இந்தப் பூங்காவில் தண்ணீர் சுத்தமாக இருக்கிறது.
5ஆ. இந்தப் பூங்காவில் தண்ணீர் மாசடைந்திருக்கிறது. ஏனென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்
ஒரு பூங்காவில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி, பிறரோடு நட்பாகிறார்கள். இன்னொன்றில் குழந்தைகள் கனிவுடனோ பரிவுடனோ இல்லை. யார் அதிக வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் பெற்றோர்களா? ஆசிரியர்களா? நண்பர்களா? இல்லை, நீங்களா?
1.அ, 1.ஆ
1. ஒரே சமயத்தில் இருவர் ஊஞ்சலில் உட்கார முயல்கின்றனர்.
2. குரங்குக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவனின் காலை இன்னொருவன் இழுக்கிறான்.
3. மணலுக்கு யார் வந்தாலும் அவர்களின் மீது ஒரு குழந்தை மணலை வாரி எறிகிறது. 4. குரங்குக்கம்பியில் இரு கம்பிகளைக் காணவில்லை. 5. ஒரு சிவப்பு ஊஞ்சல் இருக்கை நீலமாக மாறியுள்ளது. 6. மணலில் மண் அள்ளும் கரண்டியைக் காணோம்.
2.அ, 2.ஆ
1. ஒரு குட்டிப்பெண் நடுவரிடம் வாதம் செய்கிறாள்.
2. ஒரு பந்தைப் பிடிக்க இரு குழந்தைகள் சண்டையிடுகின்றனர்.
அதோடு ஒருவரை ஒருவர் அடிக்க முயற்சி செய்கிறார்கள்.
3. ஒரு குழுவைச் சேர்ந்தவர் இன்னொரு குழுவில் ஆடும் ஆட்டக்காரரை
இடறிவிட ஆயத்தமாகிறார்.
4. வெள்ளைச் சட்டைகளிலுள்ள நீலக் கட்டங்களெல்லாம்,
நீலக் கோடுகளாக மாறியுள்ளன.
5. ஒரு சிறுமியின் சடை மட்டும் வேறுபட்டு உள்ளது.
6. நடுவர் கழுத்திலிருந்து ஒரு நீல விசில் தொங்குகிறது.
3.அ, 3.ஆ
1. சாக்லேட் தாளை ஒருவர் தரையில் வீசி எறிகிறார்.
2. சைக்கிளில் தேநீர் விற்பவரைச் சுற்றி பிளாஸ்டிக் டம்ளர்கள் கிடக்கின்றன.
3. குப்பையைக் குப்பைத் தொட்டியில் போட ஒருவன் முயற்சிக்கிறான்.
அது தவறி வெளியில் விழுகிறது.
4. செடிகளுக்கிடையே ஒரு நீல பிளாஸ்டிக் தாள் கிடக்கிறது.
5. பூங்காவின் சுற்றுச் சுவர்களில் பழைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
6. விளக்கின் அடியில் குப்பை குவிந்து கிடக்கிறது.
4.அ, 4.ஆ 1. பச்சை சட்டை அணிந்த சிறுமி அவளுடன் ஸ்கிப்பிங் ஆடவந்த ஒரு சிறுவனை விரட்டி விடுகிறாள். 2. சிறுமிகள் சிலர் ரோலர் ஸ்கேட்டுகளோடு(Roller Skates) உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால், பெரிய ரோலர் ஸ்கேட்டர்கள் அவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. 3. ஒரு ரோலர் ஸ்கேட்டர்(Roller Skater) இன்னொரு ரோலர் ஸ்கேட்டரை இடிக்கிறார். 4. ரோலர் ஸ்கேட்டிங் ஷூவின் நாடா ஒன்று அவிழ்ந்திருக்கிறது. 5. குழந்தைகள் நொண்டி விளையாடும் இடத்தில் தேவையில்லாத பெட்டி ஒன்று உள்ளது. 6. ஒரு ஸ்கிப்பிங் கயிறு மட்டும் நீலமாக உள்ளது.
5.அ, 5.ஆ 1. தோட்டக்காரரின் பக்கத்தில் நிற்கும் சிவப்பு சட்டை அணிந்த குழந்தை ஒரு பூவைப் பறிக்கிறது. 2. ஒரு குழந்தை நாயின் வாலை முறுக்குகிறது; நாய் வலியில் துன்பப்படுகிறது. 3. ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர் நீரில் எச்சில் துப்புகிறார். 4. தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களில் ஒன்று மட்டும் மஞ்சளாக உள்ளது. 5. தண்ணீர் நுரைத்துக்கொண்டிருக்கிறது. 6. நீரிலிருந்து வெளிவரும் வாத்தின் இறக்கையில் கருப்பு நிறம் படிந்திருக்கிறது.