ப்ரொஸிக்கு புசு புசு பூனை வேண்டும்.
ப்ரொஸியின் குடும்பம் புசு புசு பூனைகளை பார்க்கச் சென்றனர்.
ப்ரொஸிக்கு இந்தப் பூனைதான் வேண்டும்.
இது அவளுக்கு மிகவும் பெரியது.
டிம்மிற்கு இந்தப் பூனைக் குட்டி தான் வேண்டும்.
இது அவனுக்கு மிகவும் சிறியது.
அம்மாவிற்கு இந்தப் பூனைக் குட்டி தான் வேண்டும்.
இது அவருக்கு மிகவும் வேகமானது.
எல்லோருக்கும் இந்தப் பூனைக் குட்டி பிடித்திருந்தது.
அவர்கள் அந்தப் பூனைக் குட்டியை எடுத்துக் கொண்டனர்.
எல்லோரும் அந்தப் புது புசு புசு பூனைக் குட்டியுடன் மகிழ்கின்றனர்.