ரொம்ப நாளாவே
செல்விக்கு
பூனைக்குட்டி
வாங்கணும்னு
ஆசை.
அம்மா, அண்ணா
அப்புறம் செல்வி
மூணு பெரும்
நிறையப்
பூனைக்குட்டிகளைப்
பார்க்கப் போனாங்க.
எனக்கு இந்த
பூனைக்குட்டி தான்
வேணும்னு சொன்னா
செல்வி. ஹ்ம்ம்...
ஆனா
இது ரொம்ப பெரியப்
பூனை.
எனக்கு இந்த
பூனைக்குட்டி தான்
வேணும்னு சொன்னா
தீபக். ஐயோ....
ஆனா இது ரொம்ப
ரொம்பச் சின்ன
பூனை.
.
எனக்கு இந்த
பூனைக்குட்டி தான்
வேணும்னு
சொன்னாங்க
அம்மா.
அய்யய்ய ....
ஆனா இது
ரொம்ப
சேட்டை பண்ற
பூனை.
.
எல்லாருக்கும்
இந்த புசு புசுப்
பூனைக்குட்டியப்
புடிச்சிருக்கு.
அதனால இந்தப்
புசு புசுப்
பூனைக்குட்டியையே
வாங்கிக்கிட்டாங்க.
எல்லாரும் இந்த புசு
புசுப் பூனைக்குட்டிக்
கூட சந்தோசமா
விளையாடறாங்க.