புலி வருது! புலி வருது!
பதுங்கிப் பதுங்கிப் புலி வருது!
தாகம் தணிக்கப் புலி வருது
அழகை ரசித்துப் புலி வருது
ஆடி அசைந்து புலி வருது
சோம்பல் முறித்து புலி வருது
புலி வருது! புலி வருது!
பாய்ந்து பாய்ந்து ஓடுங்க!
திபுதிபுன்னு முழிக்கும் புலிக்கு
நடந்ததொன்றும் புரியல!