புலியாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.
ஆம்! புலிகள் அழகும் சீற்றமும் மிகுந்தவைதான்.
ஆனால், புலிகள் பெரியதாகவும் கனமாகவும் கூட இருப்பவை. எனவே, அவற்றுக்கு வேட்டையாடுவது சிரமமாக இருக்கிறது.
இருபது முறை வேட்டையாடினால், அதில் ஒரு முறைதான் புலி தான் வேட்டையாடியதை சாப்பிடும்.
புலி காட்டுக்குள் எங்காவது போகும்போது,
காவ்! காவ்! கஃக்!
மந்தி வயதான மனிதர்கள் இருமுவதைப் போன்று சத்தம் எழுப்பும்!
காவ்! காவ்! கஃக்!
ஆவூ! ஹாவூ!
ஊவ்! ஊவ்! ஊவ்!
புள்ளிமான் சிறு பறவையைப் போல் குரல் எழுப்புகிறது!
ஊவ்! ஊவ்! ஊவ்!
காட்டில் எல்லோருக்கும் புலி இங்கே இருப்பது தெரியும்!
ஆஹூன்? ஆஹூன்?