puliyin suvaiyaana virunthukal

புலியின் சுவையான விருந்துகள்

புலிக்கு அடுதல்(Baking) பிடிக்கும். தினமும் தான் தயார் செய்த விருந்துகளை காட்டில் விற்க சென்றது. ஆனால் எதுவுமே விற்கவில்லை. ஒரு நாள், புலி இதனை விசாரிக்க சென்றது.

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு காட்டில் ஒரு புலி இருந்தது.

அதற்கு 1அடுதல் மிகவும் பிடிக்கும்.

1அடுதல் - Baking

ஒரு நாள் புலி, 2பச்சை  விதையவரை கொண்டு ஒரு முழு அடுக்கு வரை, சுவையான 3பை என்னும் தின்பண்டத்தை வாட்டியது.  புலி வாட்டிய பையை ஒரு 4வணிக வண்டியில் ஏற்றி வீதியில் விற்க சென்றது.

2 பச்சை விதையவரை - Green Beans

3 பை - Pie

4 வணிக வண்டி -  Shopping Cart

தென்றல் காற்று பையின் நறுமணத்தை வழி முழுவதும் கொண்டு சென்றது.

பையின் வாசம் மானின் மூக்கை எட்டியது, ஆனால் மானுக்கு வாசனையை பின்தொடர தைரியம் இல்லை. புலிக்கு பயந்தது மான்!

மதியம் ஆகி விட்டது, ஆனால் புலி எதையும் விற்கவில்லை. புலி ஏமாற்றத்துடன் தனது வண்டியுடன் வீட்டிற்கு திரும்பியது.

புலி தான் செய்த பச்சை விதையவரை பை - அனைத்தையும் அன்று இரவு தானே சாப்பிட்டு முடித்தது.

புலியின் வயிறு முட்ட முட்ட நிரம்பியது!

அடுத்த நாள், புலி வாழைப்பழத்தை கொண்டு ஒரு முழு அடுக்கு வரை, சுவையான பை என்னும் தின்பண்டத்தை வாட்டியது. புலி அந்த பைகளை ஒரு 5தொன்மையான மரத்தின் கீழ் விற்க சென்றது.

5 தொன்மை - ancient

புலியின் வண்டியில் இருந்த வாழைப்பழ பையின் 6நீராவியின் நறுமணம் மணக்க மணக்க மேலே மேலே எழுந்து.......

..... நேரடியாக குரங்கின் மூக்கை சென்று அடைந்தது!

6நீராவி - Steam

குரங்கிற்கு அந்த பைகளை ருசி பார்க்க ஆசையாக இருந்தது, ஆனால் அதற்கு கீழே இறங்கி வர தைரியம் இல்லை.  புலிக்கு பயந்தது குரங்கு!

மதியம் ஆகி விட்டது, ஆனால் புலி எதையும் விற்கவில்லை. புலி ஊக்கமின்றி தனது வண்டியுடன் வீட்டிற்கு திரும்பியது.

புலி தான் செய்த வாழைப்பழ பைகள் அனைத்தையும் அன்று இரவு தானே சாப்பிட்டு முடித்தது.

புலியின் வயிறு முட்ட முட்ட நிரம்பியது!

மூன்றாவது நாள், 7சர்க்கரைவள்ளிக்கிழங்கு கொண்டு ஒரு முழு அடுக்கு வரை, சுவையான பை என்னும் தின்பண்டத்தை வாட்டியது. புலி அந்த பைகளை காட்டின் முனையில் இருக்கும் 8புல்வெளியில் விற்க சென்றது.

7 சர்க்கரைவள்ளிக்கிழங்கு - Sweet Potato

8  புல்வெளி - Meadow

சர்க்கரைவள்ளிக்கிழங்கின் நறுமணம் புல்வெளி எங்கும் வீசியது. அந்த வாசனை பன்றியை சென்று அடைந்தது.

பன்றிக்கு பசிக்க ஆரம்பித்தது. ஆனால் புலிக்கு பயந்தது பன்றி!

மதியம் ஆகி விட்டது, ஆனால் புலி எதையும் விற்கவில்லை. புலி மிகுந்த சோகத்துடன்  தனது வண்டியுடன் வீட்டிற்கு திரும்பியது.

புலி தான் செய்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு பைகள் அனைத்தையும் அன்று இரவு தானே சாப்பிட்டு முடித்தது.

புலியின் வயிறு இப்பொழுது ஒரு பெரிய காற்று அடைத்த  9ஊதற்பை போல் ஆகி விட்டது!

9 ஊதற்பை - Balloon

நாலாவது நாள், புலி எந்த தின்பண்டத்தையும் 10வெதுப்பவில்லை. ஏன் யாரும் தான் தயாரித்த சுவை மிகுந்த பைகளை வாங்கவில்லை என்று காரணம் அரிய புலி தீர்மானித்தது.

மான், குரங்கு மற்றும் பன்றி ஒரு சிறு குன்றில் உட்கார்ந்து கொண்டிருப்பதை புலி பார்த்தது.

10வெதுப்பவில்லை - Did not bake

அவர்கள் பேசி கொண்டு  இருப்பது புலிக்கு கேட்டது.

குரங்கு கூறியது, "புலியின் பைகள் வாசனை மிகவும்  அருமையாக இருந்தது!"

பன்றி கூறியது, "என் வாழ் நாளில் புலியின் ஒரு பையையாவது ருசித்து பார்க்க வேண்டும்!"

மான் கூறியது, "ஆனால் நம் அனைவருக்கும் புலியை கண்டால் ஒரே பயம்."

புலிக்கு ஒரு யோசனை வந்தது!

ஐந்தாவது நாள், புலி  முழு மூன்று  அடுக்கு கொண்ட பைகளை தயாரித்தது: ஒன்று பச்சை விதையவரை, இரண்டு வாழைப்பழம் மற்றும் மூன்று  சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

அனைத்தையும் புலியுடைய மிக பெரிய வணிக வண்டியில் ஏற்றியது.

புலி வெள்ளை மாவின் மீது உருண்டது.

தனது நகங்களை வெட்டியது.

தனக்கு பெரிய இரட்டை காதுகளை போட்டு கொண்டது.

இப்பொழுது புலியை பார்க்க ஒரு முயல் போல இருந்தது!

புலி ஆவலுடன் தன்னுடைய வண்டியை சிறு குன்றிற்கு உருட்டி சென்றது.

சிறிது நேரத்தில், யாரோ அழைத்தார்கள், "எங்களுக்கு பைகள் வேண்டும்!" புலி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மிகவும் ஆச்சரியப்பட்டது.

அங்கே மூன்று புலிகள் தனது பைகளை வாங்க வந்தார்கள்!

ஒருவருக்கு பெரிய மூக்கும் பெரிய காதுகளும் இருந்தது.

இன்னும் ஒருவருக்கு இரட்டை கொம்புகள் இருந்தது.

மற்றும் ஒருவருக்கு நீண்ட கைகள் இருந்தது.

பன்றி, மான் மற்றும் குரங்கை புலி கண்டு கொள்கிறது. அந்த மூவரும் புலியையும் கண்டு உணர்கிறார்கள்.

நால்வரும் சிரிப்பு வெடியில் வெடித்தார்கள்.

இதற்கு மேல் புலிக்கு யாரும் பயப்படவில்லை. அனைவரும் நண்பர்கள் ஆனார்கள்.

புலியின் வெதுப்பகம் காட்டில் மிகவும் பிரபலம் ஆனது.

தினமும் புலி மதிய வேளைக்கு முன் அனைத்து பைகளையும் விற்று முடித்தது!

வெதுப்பகம் - Bakery