ஒரு பெரிய காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது.அது தனக்கு தேவையான உணவு எந்த வித சிரமமும் இல்லாமல் தானாகாவே கிடைக்க வேண்டும் என எண்ணியது.எனவே எல்லா காட்டு விலங்குகளையும் அழைத்து , "விலங்குகளே ! நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக எனக்கு உணவாக வரவேண்டும்" என ஆணையிட்டது.
அன்றைய தினம் ஒரு முயல்குட்டி உணவாக செல்ல வேண்டிய நாள் . சிங்கத்திடம் இருந்து எப்படித் தப்பிப்பது என சிந்தித்துக் கொண்டு சென்ற முயல் குட்டி ஒரு திட்டம் தீட்டியது. நேரம் தவறி வந்த முயலைப் பார்த்து கோபம் கொண்டது சிங்கம். அதற்கு அந்த முயல் குட்டி' ராஜாவே! நான் வரும் வழியில் ஒரு பலம்வாய்ந்த சிங்கத்தைக் 'கண்டேன் என்றது.
கோபம் கொண்ட அந்த சிங்கம், அற்ப புயலே! பலம் வாய்ந்த அந்த சிங்கம் எங்கே? எனக் கேட்டது முயல் ஒரு பெரிய கிணற்றை காட்டி எட்டிப்பார்க்கச் சொன்னது. கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த சிங்கம் தண்ணீரில் தெரியும் தன் உருவத்தை மற்றொரு சிங்கமென நினைத்து கோபமடைந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. சினம் கொண்ட சிங்கம் தண்ணீரில் முழ்கி இறந்தது. அனைத்து விலங்குகளும் முயல் புத்திக் கூர்மையைப் பாராட்டி மகிழ்ந்தனர் .