சிங்கம் தான் காட்டின் ராஜா.
அது கர்ஜிக்கும் போது காட்டில் அனைவரும் பயந்து நடுங்கினர்.
சிங்கத்திற்கு இரண்டு நாட்களாக பலத்த பல் வலி. "மகாராஜா, இந்தப் பல்லை பிடுங்கிவிடுங்கள் , என்று கூறியது அந்தக் காட்டின் வைத்தியரான குரங்கு. "சரி", என்று ஒப்புக் கொண்டது சிங்கம்.
சிங்கத்திற்கு இரண்டு நாட்களாக பலத்த பல் வலி.
"மகாராஜா, இந்தப் பல்லை பிடுங்கிவிடுங்கள் , என்று கூறியது அந்தக் காட்டின் வைத்தியரான குரங்கு.
"சரி", என்று ஒப்புக் கொண்டது சிங்கம்.
ஆனால் யார் சிங்கத்தின் பல்லை பிடுங்கி எடுப்பார்கள்? எல்லோர்க்கும் அதனைக் கண்டாலே பயம்! "மகாராஜா, நான் என் பின்னங்கால்களால், உங்கள் பல்லை எட்டி உதைக்கிறேன். அது விழுந்துவிடும்," என்றது முட்டாள் கழுதை.
ஆனால் யார் சிங்கத்தின் பல்லை பிடுங்கி எடுப்பார்கள்? எல்லோர்க்கும் அதனைக் கண்டாலே பயம்!
"மகாராஜா, நான் என் பின்னங்கால்களால், உங்கள் பல்லை எட்டி உதைக்கிறேன். அது விழுந்துவிடும்," என்றது முட்டாள் கழுதை.
"உன் ராஜாவை உதைக்கும் அளவிற்கு தைரியமா உனக்கு?", என்று சிடுசிடுவென கர்ஜித்தது சிங்கம். கழுதை தன் வாலை சுருட்டிக் கொண்டு பயந்து ஓடியது.
"உன் ராஜாவை உதைக்கும் அளவிற்கு தைரியமா உனக்கு?", என்று சிடுசிடுவென கர்ஜித்தது சிங்கம்.
கழுதை தன் வாலை சுருட்டிக் கொண்டு பயந்து ஓடியது.
யானை, சிறுத்தைப்புலி, கரடி, மற்றும் மான் என அனைவரும் கவலை கொண்டனர் . யார் துணிச்சலாக சிங்கத்தின் வாயிற்குள் கையை விடுவார்கள்?
யானை, சிறுத்தைப்புலி, கரடி, மற்றும் மான் என அனைவரும் கவலை கொண்டனர் .
யார் துணிச்சலாக சிங்கத்தின் வாயிற்குள் கையை விடுவார்கள்?
இரண்டு நாட்கள் கழிந்தன. பல் வலி தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துக்கொண்டே போனது. "நான் உங்கள் பல்லை பார்க்கவா?", என்று எலி ஓர் இரவு தனியாக இருந்த போது கேட்டது. "சரி", என்று கூறி சிங்கம் வாயை அகலமாக திறந்தது.
இரண்டு நாட்கள் கழிந்தன. பல் வலி தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துக்கொண்டே போனது.
"நான் உங்கள் பல்லை பார்க்கவா?", என்று எலி ஓர் இரவு தனியாக இருந்த போது கேட்டது.
"சரி", என்று கூறி சிங்கம் வாயை அகலமாக திறந்தது.
"அடடே! உங்கள் பற்களுக்கு இடையே நிறைய அழுக்கு சிக்கிக் கொண்டு உள்ளது", என்றது எலி. தன் கூர்மையான பற்களை வைத்து சிங்கத்தின் பல்லை எலி சுத்தம் செய்தது. அதன் பின் சிங்கத்தின் பல் வலி நன்றாக குறைந்தது.
"அடடே! உங்கள் பற்களுக்கு இடையே நிறைய அழுக்கு சிக்கிக் கொண்டு உள்ளது", என்றது எலி. தன் கூர்மையான பற்களை வைத்து சிங்கத்தின் பல்லை எலி சுத்தம் செய்தது. அதன் பின் சிங்கத்தின் பல் வலி நன்றாக குறைந்தது.
"மகாராஜா, தினமும் உங்கள் பற்களை சுத்தம் செய்யுங்கள், இல்லையெனில் உங்கள் பற்கள் அழுகி விடும்", என்றது அந்த புத்திசாலியான சிறிய எலி.
"மகாராஜா, தினமும் உங்கள் பற்களை சுத்தம் செய்யுங்கள், இல்லையெனில் உங்கள் பற்கள் அழுகி விடும்", என்றது அந்த புத்திசாலியான சிறிய எலி.
"ஆம், நீ கூறுவது சரி தான். ஆனால் தயவு செய்து இதை பற்றி யாரிடமும் சொல்லாதே, இல்லையெனில் எல்லோரும் மகாராஜா சுத்தமானவர் இல்லை என்று கூறுவார்கள்", என கெஞ்சியது சிங்கம்.
"சரி", என்று சிரித்தது எலி.
சிங்கமும் சிரித்தது.