raaniyum kiliyum

ராணியும் , கிளியும்

ராணி, தான் கிளியுடன் ஊரை சுற்றி பார்க்கும் கதை.

- Beulah Beulah

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ராணி தான் வளர்த்த கிளியிடம்  தனக்கு ஊரை சுற்றி காட்ட சொன்னாள் .

முதலில் கிளி பூக்கள் நிறைந்த வயலுக்கு ராணியை கூட்டி சென்றது.

அடுத்ததாக மலைகள் , குன்றுகள் மீது அழைத்து சென்றது.

பிறகு கிளி தன் நண்பனான யானையை அறிமுகப்படுத்தியது.

ராணி யானை மீது அமர்ந்து கொண்டு சந்தோஷமாக சுற்றி பார்க்க சென்றாள்.

செல்லும் வழியில் கிளி தன் குரங்கு நண்பனைஅறிமுகப்படுத்தியது.

குரங்கு ராணிக்கு குடிக்க இளநீர் பறித்து கொடுத்தது.

இருவரும் ஊரை சுற்றி பார்த்தது விட்டு சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்.