திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானத்தில் இருந்து மின்னலோடு
கூடிய மழைத்துளிகள் பூமியை வந்தடைந்தது.
அம்மழைநீர் துளித்துளியாக விழும் ஒலி இதமாகவும், மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.
மழைநீரை மகிழ்ச்சியோடு வரவேற்ற விவசாயி நனைந்து கொண்டே
பயிர்களைத் தொட்டுப் பார்த்து நெகிழ்ந்தார்.
அந்த வயலுக்கு அருகிலுள்ள சாலையில் , மழையில் குடையில்லாமல் குளிரோடு கைகளை இறுக்கமாக கட்டி நடந்து சென்ற நாயினைக் காணும்போது
பரிதாபமாக இருந்தது.
இந்தக் காட்சிகளைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த மீனா
மழை கொல்லை அழகு! என கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்த
அவளோடு ..
அவள் வீட்டின் வெளியில் ஆரவாரத்தோடு அந்த மழையினை மகிழ்ச்சியோடு வரவேற்றபடி அவளின் தோழி நனைவது இன்னும் மகிழ்ச்சியோடு இருந்தது.
இப்படியெல்லாம் பொழிந்த மழை வயல்வெளிகளைக் கடந்து இறுதியாக ஆற்றில் கலந்தது. சில மணித்துளிகளில் எத்தனை நிகழ்வுகள் மழையாக வந்து மனதில் பதிந்தது.