மணியின் பெற்றோர் அவனுக்கு ஞாயிற்றுக்கிழமை சிவப்பு ரெயின் கோட் வாங்கித் தந்தனர். "அம்மா நான் இப்போது இதை உடுத்தலாமா"எனக் கேட்டான். "இல்லை மணி மழை விரைவில் வரும். இன்று வானம் தெளிவாக உள்ளது" என கூறினார்.
திங்கட்கிழமை வெயில் அடித்தது. அதை கண்ட மணி ,"அம்மா இன்று மழை பெய்யுமா" என வினவினான். அதற்கு அவனின் அம்மா ,"இன்று இல்லை மணி"என பதில் கூறினார்கள்.
செவ்வாய்க்கிழமை வானம் நீலமாக இருந்தது.அதை கண்ட மணி,"என் ஆசை எப்போதுதான் நிறைவேறுமா"என்று தன் தாயிடம் வினவினான் அதற்கு அவனின் அம்மா," இன்று மழை பெய்யாது "என பதிலளித்தார்கள்.
புதன்கிழமையும் வெயில் அடித்தது. அதைக் கண்ட மணி," அம்மா ஏன் மழை பெய்யவில்லை" என்று கேட்டான்.அதற்கு அவனின் அம்மா" விரைவில் பெய்யும் மணி" என பதில் கூறினார்கள்.
வியாழக்கிழமை மணி சுற்றுலா செல்ல புறப்பட்டான்.அப்போது அவன் அம்மாவிடம் "அம்மா நான் ரெயின் கோட்டை எடுத்துக் கொள்ளட்டுமா? இன்று மழை பெய்யுமா? "என்று வினவினான்.அன்றும் இல்லை என அம்மா பதில் கூறினார்கள்.
வெள்ளிக்கிழமை மேகமூட்டமாக இருந்தது அதை கண்ட மணி ,"இன்று மழை பெய்யலாம் அல்லவா", என்று அவன் அம்மாவிடம் கேட்டான்.அதற்கு அவனின் அம்மா பெய்யலாம்" என சொன்னார்கள்.
சனிக்கிழமை இடி இடித்தது.அதைக்கேட்ட மணி "நான் கேட்டது இடி தானா?"என ஆச்சரியப்பட்டான்.
ஒருவழியாக மழையும் பெய்தது.அதை கண்ட மணி வெளியே ஓடினாள்.
அவன் அம்மா அவனை கூப்பிட்டு ,"ஆனால் மணி நீ இன்று ரெயின் கோர்ட்டை மறந்துவிட்டாய்". அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் மழையில் விளையாடி கொண்டிருந்தான், மணி.