rama s desire

ரமாவின் ஆசை

நேர்மைக்கு கிடைத்தப் பரிசு. ரமா மிகவும் நேர்மையாக நடந்துக் கொண்டாள் என்பதை விளக்குவதே இந்தக் கதை.

- Hema Elango

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பனிகூழ்! பனிகூழ்! என்று பனிக்கூழ் விற்பவர் தெருக்களில் கூவிக்கொண்டே  சென்றார்.

ரமா வேகமாக அம்மாவிடம் சென்று, ''அம்மா! அம்மா! எனக்கு பனிக்கூழ் வேண்டும்'' என்றாள்.

அதற்கு அம்மா, ''முதலில் உன் வீட்டுப்பாடங்களைச் முதலில் போய் செய்'' என்றார்.

அம்மா............’தயவு செய்து என்னைப் கடைக்குப் போக விடுங்கள்’’ என்று ரமா கெஞ்சினாள்.

ரமாவின் முகம் வாடி விட்டது.

அம்மா, மீண்டும்,  '' நீ உன் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டாயா''? என்று கேட்டார்.

ம்ம்ம்...... என்று ரமா இழுத்தபடி, '' வீட்டுப்பாடம் செய்ய  நோட்டுப்புத்தகம் வேண்டும்''. என்றாள்.

உடனே, 5 வெள்ளி பணம் கொடுத்தார்.

''நீ போய் நோட்டுப்புத்தகமும் ஒரு சோப்பும் வாங்கி வா''!  என்றார் அம்மா

* வெள்ளி  என்பது  சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயம்.

ரமா, மிக சந்தோசமாக ‘’ லா, லா, லா’’ என்று பாடிக் கொண்டே கடையை நோக்கி நடந்தாள்.

ரமா கடைக்குச் சென்றாள். கடைக்காரர் ஒரு நோட்டுப்புத்தகமும், ஒரு சோப்பும் கொடுத்தார்.

''எவ்வளவு'' என்று ரமா கேட்டாள்.

ஒரு நோட்டுப்புத்தகம் இரண்டு வெள்ளி, ஒரு சோப்பு இரண்டு வெள்ளி என்றார் கடைக்காரர்.

அப்படியென்றால் மொத்தம் நான்கு வெள்ளி, இந்தா      பொண்ணு,மீதி வெள்ளி என்றார் கடைக்காரர்.

ரமா, கடையிலிருந்து திரும்பியதும், கடைக்காரர் மீதி கொடுத்தப் பணத்தை எண்ணினார்.

நான் கடைக்காரிடம் ஐந்து வெள்ளிக் கொடுத்தேன். ஒரு நோட்டுப்புத்தகம் இரண்டு வெள்ளி, ஒரு சோப்பு இரண்டு வெள்ளி என்று தனக்குள்ளேப் பேசிக் கொண்டாள்.

ரமா, கடையிலிருந்து திரும்பியதும், கடைக்காரர் மீதி கொடுத்தப் பணத்தை எண்ணினார்.

நான் கடைக்காரிடம் ஐந்து வெள்ளிக் கொடுத்தேன். ஒரு நோட்டுப்புத்தகம் இரண்டு வெள்ளி, ஒரு சோப்பு இரண்டு வெள்ளி என்று தனக்குள்ளேப் பேசிக் கொண்டாள்.

கடைக்காரர், ஒரு வெள்ளி கொடுப்பதற்குப பதிலாக இரண்டு வெள்ளியைக் கொடுத்துவிட்டார்.

ம்ம்ம்ம்....... இந்த பணத்தை நானே வைத்துக் கொள்ளலாமா? என்று ரமா யோசித்தாள்.

வாவ்! எனக்கு கிடைத்த கூடுதல் பணத்தில் பனிக்கூழ் வாங்கலாம் என்று நினைத்தாள்.

சிறிது

யோசனைக்குப்

பிறகு,

ச்சே..ச்சே.... நான் இந்த கூடுதல்  பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட  வேண்டும் என்று எண்ணினாள்.

ரமா, வேகமாக கடைக்குச் சென்றாள். பல விதமான பனிக்கூழ்கள் இருந்தன.. எல்லாவற்றையும் வாங்க ஆசையோ ஆசை!

வேறுறொரு பெண் கடையிலிருந்து, பனிக்கூழ் ஒன்றை வாங்கிச் செல்வதைப் பார்த்தாள்.

அந்த பெண்ணைக்     கடைக்காரர்,ஏ பெண்ணே! ''நீ அதிகமான பணத்தைக் கொடுத்துவிட்டாய். இந்தா! உன் சரியான பணத்தை வாங்கிக் கொள்'' என்று கடைக்காரர் கூப்பிட்டார்

கடைக்காரர் அந்த பெண்ணிடம் சரியானப் பணத்தைக் கொடுத்தார்.

இதைப் பார்த்த ரமா, கடைக்காரரிடம் சென்று, ''நீங்கள் கூடுதலாகப் பணத்தைக் கொடுத்துவிட்டீர்கள்'' இதோ! உங்கள் பணம் என்றுக் கூறி, கடைக்காரரிடம் கொடுத்தாள்.

கடைக்காரர், '' நீ என்ன ஒரு நேர்மையான பெண்'' என்று பாராட்டினார்.

ரமாவின் நேர்மையைப் பாராட்டிக் கடைக்காரர் ரமாவிற்கு ஒரு பனிக்கூழை இலவசமாகக் கொடுத்தார்.

ரமாவிற்கு, ஓரே! மகிழ்ச்சி! பனிக்கூழை நாக்கால் நக்கிக் கொண்டே வீட்டை நோக்கி விரைந்தாள்.