rose rockyin pasumaith thittam

ரோஸ், ராக்கியின் பசுமைத் திட்டம்

வீட்டில் வீணாகும் பொருட்களை தாவரங்களுக்கான உணவாக மாற்றும் ரகசியம் ரோஸுக்குத் தெரியும். இயற்கை உரம் தயாரிப்பது பற்றிய இப்புத்தகத்தில், நீங்களும் ரோஸ், ராக்கியின் சாகசங்களில் பங்கேற்கலாம் வாருங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது, ஒரு புதிய யோசனையுடன் வந்தாள் ரோஸ்.

“அப்பா! இயற்கை உரம் தயாரிப்பது எப்படின்னு எனக்குத் தெரியுமே!” என்றாள்.

“இயற்கை உரமா? அப்படீன்னா என்ன?” என்று தலையைச் சொறிந்துகொண்டே  கேட்டார் அவளுடைய அப்பா.

“நம்ம வீட்டுக் கொல்லைப்புறத்துலயே இயற்கை உரத்தை தயாரிக்கலாமா, அப்பா?” என்று ராக்கியின் காதை இழுத்தபடி கேட்டாள் ரோஸ்.

“ஆனா, இயற்கை உரம்னா என்ன?” என்று அப்பா காதைச் சொறிந்தபடி கேட்டார்.

“அப்பா, அதுதான் செடிகொடிகளோட சாப்பாடு. இயற்கை உரம் செடிகளை உயரமா, வலுவா வளரச்செய்யும்” என்றாள் ரோஸ்.

“ம்மே, ம்மே! இதெல்லாம் எனக்கே தெரியுமே” என்றது ராக்கி.

இதைக் கேட்டதும் அப்பா கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.

“அட! நீங்க ஏன் கவலைப்படுறீங்க? இயற்கை உரம் தயாரிக்க நம்ம வீட்ல வீணாகிற பொருட்களே போதும்.”

கொல்லைப்புறத்துக்குச் சென்ற அவர்கள் அங்கே ஒரு குழியைத் தோண்டினார்கள்.

“இயற்கை உரம் தயாரிக்கறதுக்கு என்னென்ன வேணும்னு உனக்குத் தெரியுமா, ராக்கி?”

“நிறைய காய்கறித் தோல், பழத் தோல் வேணும். பாரு! இனிமே நாம எதையும் வீணாக்க வேண்டியதில்லை!”

“நிறைய செய்தித்தாள்கள் வேணும்!”

“காய்ந்த இலைகள் வேணும்!”

“அப்புறம், தண்ணி வேணும்!”

“அட, நாம போட்டதெல்லாம் எங்க போச்சு?”

“ராக்கி…”