rose rockyin poochi por

ரோஸ், ராக்கியின் பூச்சிப் போர்

ரோஸுக்கும் ராக்கிக்கும் பூச்சிகள் என்றாலே பிடிக்காது. ஏனென்றால், அவை நம்மை கடிக்கின்றன, இல்லை, கொட்டுகின்றன. அவர்கள் மனதை மாற்றியது என்ன, தெரியுமா? பூச்சிகளைப் பற்றிய இந்தக் கலகலப்பான புத்தகத்தின் வழியாக ரோஸ், ராக்கியின் சாகசப் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எறும்புகளைப் பார்த்த ராக்கி சத்தமாகக் கத்தியது.

ரோஸ் அவற்றின் மீது நடனமாடினாள்.

ம்ம்ம்மே!

ராக்கி சில வண்டுகளைப் பார்த்தது. அவற்றைத் தன் குளம்புகளால் மிதித்தது.

ரோஸ் அவற்றின்மீது குதித்து ஒவ்வொன்றாக நசுக்கினாள்.

நசுக்!

நசுக்!

ராக்கி, தேனீக்களைத் துரத்திக் கொண்டே சுற்றிச்சுற்றி வந்தது.

ரோஸ் கைகளை ஆட்டி அவற்றையெல்லாம் விரட்டினாள்.

“என்ன செய்து கொண்டிருக்கிறாய், ரோஸ்?” என்று அம்மா கேட்டார்.

“இந்தப் பூச்சிகளைக் கொல்கிறோம், அம்மா!”

“அப்படியா, ஏன்?”

“பூச்சிகள் நம்மைக் கொட்டுகின்றன. கடிக்கின்றன. உடம்பு முழுக்க அரிப்பு வரவைத்து, சொரிய வைக்கின்றன” என்றாள் ரோஸ்.

ரோஸ் சொன்னதை ஆமோதித்தது ராக்கி.

ம்ம்ம்மே!

“உனக்கு தேன் பிடிக்கும்தானே ரோஸ்?“ என்றார் அம்மா.

“பிரெட்டுடன் சாப்பிடப் பிடிக்கும்” என்றாள் ரோஸ்.

“அந்தத் தேனை யார் செய்கிறார்கள் தெரியுமா?” என்று தேனீயை சுட்டிக்காட்டினார் அம்மா.

“ஓ! அப்படியா?” என்றாள் ரோஸ்.

“தோட்டத்து காய்கறிகளை சாப்பிடுவது உனக்குப் பிடிக்கும்தானே ராக்கி?” என்று கேட்டார் அம்மா.

ஒரு ஆடு எந்த அளவு இளிக்க முடியுமோ அந்தளவுக்கு இளித்தது ராக்கி.

“பசியோடு இருக்கும் பூச்சிகளிடமிருந்து அந்த காய்கறிகளைக் காப்பாற்றுவது யார் தெரியுமா?” என்று கேட்டார் அம்மா.

“அப்புறம் எறும்புகள்... அவைதான் குப்பைகளை எல்லாம் எடுத்துச் செல்கின்றன” என்றார் அம்மா.

“அப்படியென்றால், பூச்சிகள் இல்லாவிட்டால் நமக்குத் தேன் கிடைக்காது. காய்கறிகள் இருக்காது. ஒரே செத்துப்போன கரப்பான் பூச்சிகளாக இருக்குமா?” என்று கேட்டாள் ரோஸ்.

“அதேதான்!” என்றார் அம்மா.

“அப்படியானால், நாம் என்னதான் செய்வது?”