கமலிடம் ஒரு நாய் இருந்தது. அவன் அதனை பங்கூ என்று அழைப்பான்.
ஒரு நாள், கமல் பங்குவிற்கு ரொட்டி ஒன்றை ஊட்டிக்கொண்டிருந்தான். அப்போது, குரங்கொன்று வந்து அந்த ரொட்டியை பறித்துக் கொண்டு அப்பால் சென்றது.
அந்தரொட்டியை சாப்பிட முன்பு அது ஓர் சுவரின் மேலே ஏறிக்கொண்டது.
ஒரு காகம் அந்த ரொட்டியை ஓரக்கண்ணால் கண்டு கொண்டது. குரங்கு ரொட்டியை சாப்பிட முன்னர் கீழே பறந்து வந்து ரொட்டியை கௌவ்விக்கொண்டு சென்றது. அது முற்றத்திலுள்ள ஒரு மரத்திற்கு பறந்து சென்றது.
அந்த மரத்தின் மீது ஒரு மயில் அமரந்து கொண்டிருந்தது. அது ரொட்டியை பறித்துக்கொள்ள காகம் அதனை காப்பாற்றிக்கொள்ள பறந்தது. பங்கு "பௌவ், பௌவ், பௌவ்,!" என்று குரைத்தது.
காகம் பீதியடைந்தது. அத் "கா, கா!" என கரைந்தது.
காகம் அதன் சொண்டை திறக்கும் போது, ரொட்டி கீழேயுள்ள முற்றத்தின் மீது விழுந்தது.
பங்கு உடனே ரொட்டியை கௌவிக் கொண்டது. ரொட்டி உரிய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்தது.