saravin pataku

சாராவின் படகு

சாரா, தனது படகில் எல்லோரையும் ஏற்றிச் செல்ல முயன்றபோது என்ன நடந்தது தெரியுமா?

- கொ.மா.கோ. இளங்கோ

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சாராவிடம் ஒரு படகு உள்ளது.

அவளது படகு பெரியது.

அது, ஆற்றங்கரையில் உள்ளது.

சில பெண்கள் ஆற்றங்கரைக்கு வந்தார்கள்.

ஒரு பெண்ணிடம் பழக்கூடை இருந்தது.

அடுத்த பெண்ணிடம் ஒரு கோழி இருந்தது.

மற்றொரு பெண்ணிடம் ஒரு ஆடு இருந்தது.

இன்னொரு பெண்ணிடம் இரண்டு ஆடுகள் இருந்தன.

அவர்கள் எல்லோரும் சாராவிடம், "நாங்கள் எப்படி ஆற்றின் மறுகரைக்குச்  செல்வது?"என்று கேட்டார்கள்.

சாரா,"என் படகில் ஏறுங்கள்!" என்றாள்.

பிறகு, சில ஆண்கள் வந்தார்கள். ஒருவரிடம் மீன்கள் இருந்தன.

அடுத்தவரிடம் ஒரு மிதிவண்டி இருந்தது.

மற்றொருவரிடம் ஒரு சாக்கு

நிறைய மக்காச்சோளம் இருந்தது.

அடுத்தவரிடம் இரண்டு மக்காச்சோளச் சாக்குகள் இருந்தன.

சாராவிடம் அவர்கள்,"நாங்கள் எப்படி ஆற்றின் மறுகரைக்குச் செல்வது?"

என்று கேட்டனர்.

சாரா,"என் படகில் ஏறுங்கள்!" என்றாள்.

சில விலங்குகள்

ஆற்றங்கரைக்கு வந்தன.

அவை சாராவிடம்,"நாங்கள் எப்படி ஆற்றின் மறுகரைக்குச் செல்வது?"

என்று கேட்டன.

சாரா,"என் படகில் ஏறுங்கள்!" என்றாள்.

எல்லா விலங்குகளும்

படகில் ஏறிக்கொண்டன.

நாய் படகில் ஏறியது.

பூனை படகில் ஏறியது.

குரங்கு படகில் ஏறியது.

முயல் படகில் ஏறியது.

ஆமை படகில் ஏறியது.

மான் படகில் ஏறியது.

ஒரு யானை ஆற்றங்கரைக்கு வந்தது. அது சாராவிடம்,

"நான் எப்படி ஆற்றின் மறுகரைக்குச் செல்வது?" என்று கேட்டது.

சாரா,"என் படகில் ஏறிக்கொள்!" என்றாள்.

அந்த யானை படகில் ஏறியது.

படகில் தண்ணீர் புகுந்து,

படகு கவிழ்ந்தது.

அந்தப் படகு மிகவும் சிறியது. எல்லோருக்கும் போதுமான இடமில்லை.

சாரா சொன்னாள்,

"பொறுங்கள்! முதலில் பெண்களை அழைத்துச் செல்கிறேன்."

சாரா சொன்னாள்,

"அடுத்தது, ஆண்களை

அழைத்துச் செல்கிறேன்."

சாரா சொன்னாள்,

"கடைசியில், விலங்குகளை அழைத்துச் செல்கிறேன்."

அதைக்கேட்ட யானை சொன்னது,

"நான் ஆற்றில் இறங்கி

நடக்கப் போகிறேன்."