ஒரு அடர்ந்த காட்டில், சர்ப்பி என்னும் பாம்பு வாழ்ந்தது.
பாம்புக்கு கால்கள் கிடையாது. அதனால் அது நடக்க முடியாது. அது ஓடவும் முடியாது.
பாம்புக்கு இறக்கைகள் கிடையாது. அதனால் அது பறக்க முடியாது.
அதற்கு நேர் கோட்டில் நீந்தவும் தெரியாது.
சர்ப்பிக்கு ஒரு நேர் கோட்டில் நடக்க, பறக்க மற்றும் நீந்த வேண்டும் என்று ஆசை.
இதை மட்டுமே அது யோசித்துக் கொண்டிருந்தது.
"எனக்கு கால்கள் இருந்தால், ஒரு நேர் கோட்டில் நடப்பேன்.
எனக்கு இறக்கைகள் இருந்தால், ஒரு நேர் கோட்டில் பறப்பேன்."
"ஆனால் என்ன ஒரு விசித்திரம்!
என்னால் நேராக நடக்க முடியவில்லை!
என்னால் நேராக பறக்க மற்றும் நீந்தவும் முடியவில்லை!
என்னால் சறுக்கி சறுக்கியே செல்ல முடிகிறது.
வளைந்து நெளிந்து... வளைந்து நெளிந்து... வளைந்து நெளிந்து தான் செல்கிறேன்."
சர்ப்பி சில பறவைகள் பறப்பதை வானில் கண்டது.
அவை மேலும், கீழும், வட்டமாக மற்றும் வளைவாகவும் சென்றன. ஒரு பறவை கூட நேராக பறக்கவில்லை.
இந்த காட்சி சர்ப்பியை சற்று சிந்திக்க வைத்தது!
சர்ப்பி ஒரு நாள் திறந்தவெளியில் சில மான் குட்டிகளை கண்டது.
மான் குட்டிகள் அங்கும் இங்கும் ஓடின. ஒன்றுமே நேர் கோட்டில் ஓடவில்லை.
இது சர்ப்பியை சிந்திக்க வைத்தது!
சர்ப்பி ஆற்றின் அருகே சென்றது.
மீன்கள் சுழன்று சுழன்று நீந்திச்சென்றன.
இது சர்ப்பியை மேலும் சிந்திக்க வைத்தது!
சர்ப்பி நதிக்கரையில் உட்கார்ந்து, சிந்தனையில் ஆழ்ந்தது. அப்போது ஒரு நண்டு வந்தது. அதை பார்த்து சர்ப்பி சற்று ஒதுங்கியது. நண்டும் கடந்து சென்றது. ஆனால் நண்டுக்கு நிறைய கால்கள் இருந்தும் அது நேர் கோட்டில் நடக்கவில்லை.
இது சர்ப்பியை மேலும் மேலும் சிந்திக்க வைத்தது!
சர்ப்பி சிந்தித்தது, அதற்க்கு உண்மையில் இறக்கைகள் வேண்டுமா? கால்கள் வேண்டுமா? இப்போது, அது வளைந்து நெளிந்தொ அல்லது ஏற்ற இறக்கமாகவோ செல்லவில்லை.
"நான் எப்படி இருக்கிறேனோ அது நன்றாகத்தான் இருக்கிறது. நான் எப்போழுதும் ஒரே மாதரியாக சறுக்கி சறுக்கி செல்கிறேன். நான் தினமும் வளைந்து நெளிந்துதான் செல்கிறேன். மற்றவரை எப்படி பார்த்தாலும் சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது."
1. நேர் கோடுகளை கொண்டு ஐந்து வடிவங்களை வரையுங்கள்
2. வேடிக்கையான வகையில் நகரும் ஐந்து விலங்குகளின் பெயரை சொல்க
3. நேர் கோடுகளை கொண்டு அமைந்த ஐந்து உயிரினங்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?