sathuram sevvagam poonaikutti

சதுரம், செவ்வகம், பூனைக்குட்டி

இந்தப் புத்தகத்தில் வரும் பூனைக்குட்டிக்கு வடிவங்கள் பிடிக்கும். பூனை மற்றும் அதன் குட்டி நண்பனைப் பின்தொடர்ந்து சென்று பல வடிவங்களைக் கண்டு மகிழுங்கள்.

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முக்கோணக்

கூரையின் மேல்

பூனைக்குட்டி

செவ்வக

ஜன்னலில்

பூனைக்குட்டி

தலை மேலே கனசதுர ஐஸ்கட்டியோடு நடுங்கும் பூனைக்குட்டி!

மி-யா-வ்வ்வ்வ்...

பர்ர்ர்... பர்ர்ர்

சாய்சதுரக்

காற்றாடியுடன்

பூனைக்குட்டி

சதுரப் பலகையில்

பூனைக்குட்டி

மி-யா-வ்வ்வ்வ்...

பறக்....பறக்...

மகிழ்ச்சியான பூனைக்குட்டிக்கு ஒரு உருளை மரத்துண்டு

வட்டப் பாயின்

மீது தூங்கும்

பூனைக்குட்டி

நீள்வட்டக்

கண்ணாடியில்

பூனைக்குட்டி

மி-யா-வ்வ்வ்வ்...

ஸ்ருப்... ஸ்ருப்...

வெயிலில் வந்த

பூனைக்குட்டிக்கு

ஒரு கூம்பு ஐஸ்கிரீம்

அறுகோணத்

தேன்கூட்டருகில்

பூனைக்குட்டி

பிறை நிலா மீது

பூனைக்குட்டி

பசியோடு வந்த

பூனைக்குட்டிக்கு

ஒரு பட்டைக்கூம்பு சமோசா

மி-யா-வ்வ்வ்வ்...

கறுக்... முறுக்...

1. முக்கோணம்

2. சதுரம்

3. செவ்வகம்

4.  சாய்வட்டம்

5. வட்டம்

1. கனசதுரம்

2. உருளை

3. கூம்பு

4. பட்டைக்கூம்பு

5. கோளம்

இந்தப் படத்தைப் பார்த்து, இதிலுள்ள  வடிவங்களையும்

பூனைகளையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!