science for everyone newton s first law

அறிவியல் அறிவோம் வா - நியூட்டன் முதல் விதி

அறிவியல் கோட்பாடுகளின் புரிதல் கடைக்கோடி மக்களிடமும் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது எங்களின் பல நாள் விருப்பம். கற்று அறிந்த சில அறிவியல் கோட்பாடுகளை எளிய முறையில் எங்களால் முடிந்த வரை எளிய வழியில் விளக்க முயற்சி செய்துள்ளோம். இந்தப் புத்தகத்தில் நியூட்டன் முதல் விதி எளிமையாக விளக்கியுள்ளோம்.

- TAMIL ARASAN JAYASRI

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அறிவியல் யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை. மனிதரின் தேவைக்கேற்ப அறிவியல் வளர்ச்சி பெறுகிறது. சொல்லப்போனால் தேவையே கண்டுபிடிப்புகளின் ஆதித்தாய். பெரும் நெருப்பை சிறு விளக்காக மாற்றியதில் தொடங்கி இடம்பெயர்தலுக்காகச் சக்கரம்ம், இன்றைய நவீன தொழிற்நுட்பம் வரை; எல்லாமே மனிதரின் இருப்பை நீட்டிக்கச் செய்யப்படுகிற ஏற்பாடுகள்தான். காலப்போக்கில் அறிவியல் என்பது வணிகமயமாக்கப்பட்டு சிறு குழுக்களிடம் சிக்குண்டதை அறிவோம்.

அறிவியல் கோட்பாடுகளின் புரிதல் கடைக்கோடி மக்களிடமும் எடுத்துச்செல் வேண்டும் என்பது எங்களின் பல நாள் விருப்பம். கற்று அறிந்த சில அறிவியல் கோட்பாடுகளை எளிய முறையில் எங்களால் முடிந்த வரை எளிய வழியில் விளக்க முயற்சி செய்துள்ளோம்.

அறிவியல் யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை. மனிதரின் தேவைக்கேற்ப அறிவியல் வளர்ச்சி பெறுகிறது. சொல்லப்போனால் தேவையே கண்டுபிடிப்புகளின் ஆதித்தாய். பெரும் நெருப்பை சிறு விளக்காக மாற்றியதில் தொடங்கி இடம்பெயர்தலுக்காகச் சக்கரம், இன்றைய நவீன தொழிற்நுட்பம் வரை; எல்லாமே மனிதரின் இருப்பை நீட்டிக்கச் செய்யப்படுகிற ஏற்பாடுகள்தான். காலப்போக்கில் அறிவியல் என்பது வணிகமயமாக்கப்பட்டு சிறு குழுக்களிடம் சிக்குண்டதை அறிவோம்.

அறிவியல் கோட்பாடுகளின் புரிதல் கடைக்கோடி மக்களிடமும் எடுத்துச்செல் வேண்டும் என்பது எங்களின் பல நாள் விருப்பம். கற்று அறிந்த சில அறிவியல் கோட்பாடுகளை எளிய முறையில் எங்களால் முடிந்த வரை எளிய வழியில் விளக்க முயற்சி செய்துள்ளோம்.

"புடிச்சு வெச்ச புள்ளையார் போல இருக்காத" என்று வீட்டில் திட்டுவாங்கியபொழுது நான் அது நியூட்டன் முதல் விதி என்று அறிந்திருக்கவில்லை. சரி அது என்ன நியூட்டன் முதலாவது விதி? "ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்"

“ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில்….”

முன் சொல்லப்பட்டு இருப்பதை மிக எளிய வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் நீங்கள் பள்ளியில் வரிசையில் நின்று கொண்டு இருக்கும்பொழுது உங்கள் நண்பன் உங்களை விளையாட்டாகத் தள்ளியிருக்கக்கூடும். அப்போது நீங்கள் உங்கள் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு (முன்)சென்று இருப்பீர்கள்." அதாவது ஒரு நாலு அடி முன்ன போய் இருப்பிங்க.

சரி அது என்ன சீரான விரைவோடு, முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலேதான் தொடர்ந்து இருந்துவரும்?

இப்போ கண்ண மூடி முடிவே இல்லாத ஒரு தரை இருப்பதா கற்பனை பண்ணிக்கோங்க. அதுவும் நல்ல வழவழப்பான தரை.

அட இருங்க! இருங்க! முழுசாப் படிச்சிட்டு கற்பன பண்ணுங்க. இப்போ அந்த தரையில் ஒரு பந்த உருட்டி விட்டா, அந்த பந்து நிக்காம போய்ட்டேஏஏஏ…. இருக்கும் இல்லையா?

அதுவே இப்போ நீங்க அதே தரையில கூர்மையான உளி ஒன்னுத்த வச்சி கொத்து கொத்துனு கொத்தி விட்ருங்க.

இப்போ திரும்பவும் அந்தப் பந்த உருட்டி விட்டா கொஞ்ச தூரம்போய் நின்னுடும்.

அதாவது எந்த ஒரு வெளிப்புற விசையும் அதன் மேலே தாகத்தைச் செலுத்தும் வரை அது தன்னுடைய நிலையிலே சென்று கொண்டே இருக்கும். இப்படி அந்த கொத்துன இடம் பந்துமேல உரசுற உரசல் போல ஒரு வெளிப்புற விசை வராத வர, அது உருண்டோட்டிடே தான் இருக்கும். அதுவும் அந்த நல்ல வழவழப்பான முடிவில்லா தரையின்னா, தொடக்கத்துல இருந்த வேகத்துலேயே சீரா ஓடிக்கிட்டு இருக்கும். நிலையின் தன்மையை சொல்வது தான் நியூட்டனின் ஒன்றாம் விதி.

இப்போ இன்னும் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்

"ஒரு சிறிய பாறை உருண்டு வந்து அசைவற்ற பெரிய பாறையில் மோதி அசைவற்ற நிலைக்கு போய்விடும்" - சிறிய பாறை பெரிய பாறையின் அசையா நிலையை அடைகிறது.

“ஒரு மரத்துடைய கிளை தானே அசையாது, காற்றின் திசைக்கு ஏற்ப அது அமையும்” - விசையின் திசைக்கு ஏற்பக் கிளையின் அசைவு இருக்கும்.

இங்க நீங்கக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று  அதாவது எந்த ஒரு பொருளும் வெளிப்புற மாறுதல்களைப் பொறுத்து அதோட நிலைய மாத்திக்குது".

இத வச்சி ஒரு கதை எழுதலாமா? நம்ம பூமி மேல ஒரு பெரிய விண்கல், கிட்டதட்ட நம்ப பூமி மாரி மூனு மடங்கு பெருசு. வந்து மோதுதுனு வச்சிக்குவோம், என்ன ஆகும் நினைக்குறீங்க? பூமி தன்னோட நிலையான பாதையில இருந்து வேற பாதைக்கு மாறிடும். இவ்வளோ பெரிய ஆபத்துலருந்து நீங்கதான் எங்கள காப்பாத்தணும்.

என்ன செய்யலாம்? அட ஆமாங்க நீங்க நினைக்குறது ரொம்ப சரி! நியூட்டனின் விதி! அந்த விண்கல்ல

ஒரு பெரிய ஏவுகணை ஏவி மோதி அதோட வர்ற தெசைய மாத்தி வேற பக்கமா திருப்பிடுங்க. கதையோடா கரு ரெடி. மத்தத நீங்கப் பாத்துக்கோங்க! நான் நியூட்டன் வீதிக்கு திரும்பறான்.

நியூட்டன் முதலாவது விதி “LAW OF INERTIA” அதாவது தமிழில என்னன்னு பார்க்க கூகிள்ள மொழிபெயர்ப்பு பண்ணச்சொன்ன "செயலற்ற சட்டம்"முன்னு சொல்லுது (இன்னும் எந்திரங்கள் திறம்பட மொழிபெயர்க்கக் கொஞ்ச வருசமாச்சு ஆகும்).

அப்போ Inertia-உக்கு அர்த்தம் தான் என்ன? அது ஒன்னும் இல்லங்க நிலைமம்.

முன் குறிப்பிட்ட எடுத்துக்காட்ட திரும்பப் பார்ப்போமா "புடிச்சு வெச்ச பிள்ளையார் போல இருக்காதா" சொல்றங்களா அதாவது ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கிறது தான் நிலைமம்.

இன்னும் தெளிவா சொல்லணுமுன்னா நீங்க புள்ளியங்கா பறிக்கப் போறீங்கன்னு வச்சிக்குவோம். இல்ல இல்ல புளியம்பழம். அப்போ ஒரு சோறடு எடுத்துப் போய் ஒன்னு ஒன்னா பறிப்பிங்களா? கண்டிப்பா இல்ல!!. அப்போ வேறென்ன பணணுவீங்க. கல்லெடுத்து எறியலாம். மரதுல்ல ஏறிப் போய்க் கூட ஒன்னொன்னா பறிக்கலாம். இப்படிலாம் பண்ணா எப்போ பறிச்சு முடிக்குறது?

சரி நியூட்டன் இதை எப்படி செய்வாருனு யோசிப்போம். மரத்தோடா கிளையில ஏறி உக்காந்து உலுக்குவார். ஏன் அப்படிச் செய்யணுமுன்னு கேட்குறீங்களா. அவரோட விதிப்படி அப்படி உலுக்கும் பொழுது புளியன்பழத்தின் எடை அதோட அசையா நிலையிலே இருக்கச் செய்யும், பழுத்த புளியன் பழத்தோடா காம்பு லேசா இருக்கும் உலுக்கும் விசை அதை மரத்தின் கிளையிலிருந்து அறுவச்செய்யும்.

அட அப்போ நம்ப தாத்தா பாட்டிக்கும் நியூட்டன் விதி தெரிந்து இருக்கு பாருங்களேன்!

அவ்வளதாங்க இயற்பியல். உங்களைச் சுத்தி என்ன நடக்குது? அது ஏன் நடக்குது? காரணம் சொல்லுங்க நோபல் பரிசு வாங்கிக்கோங்க.