பாவம் ! ஏன் இந்த மான்குட்டி அழுகிறது. அச்சச்சோ! அது அதன் அம்மாவைத் தொலைத்துவிட்டது.அதனால் தான் அழுகிறது.
அழுகின்ற மான்குட்டியை சமாதானம் செய்ய அதனருகே சென்றது.பாவம் அதன் காலில் அடிப்பட்டு இருக்கிறதே! அழாதே என ஆறுதல் கூறியது.
அடுத்ததாக கரடி வந்து ஆறுதல் கூறியது.
முயல் வந்து மானிடம் யார் வேகமாக ஓடுகிறோம் எனப்பார்க்கலாம் என அந்த மானை அழைத்தது.மானும் கவலையை மறந்து ஓட ஆரம்பித்தது. அந்த குட்டி மானின் அம்மாவைத் தேடி!
முயல் சென்றதும் ,யானைப் போட்டி இடுகிறது. யார் முதலில் ஓடுகிறோம் என்று
அந்த யானை மகிழ்ச்சியாக குட்டிமானோடு ஓடியது.
பிறகு அந்த மான் தனியாக அதன் அம்மாவைத் தேடி ஓடிக்கொண்டே இருந்தது தைரியத்துடன்.....
அடக்கடவுளே! பாவம் குட்டி மான் கீழே விழுந்துவிட்டதே! மீண்டும் மனம் தளராமல் தேடியது.
சூப்பர் குட்டி மான் ஒருவழியாக அதன் அம்மாவை கண்டுபிடித்துவிட்டது.
குட்டிமான் அதன் அம்மாவைக்கட்டி அணைத்துகொண்டு மகிழ்ச்சியடைந்தது
அதனுடைய முயற்சி வீணாகவில்லை. அம்மாவும் தழுவியபடி நின்றது.